News
Loading...

விற்பனையில் சக்கை போட்டு வரும் சசிகலா படங்கள்…!

விற்பனையில் சக்கை போட்டு வரும் சசிகலா படங்கள்…!

ஜெ. மறைவுக்கு பிறகு நேற்று நடந்த அதிமுக பொதுக்குழுவில் அவரது தோழி சசிகலா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை அடுத்து அதிமுகவில் எல்லாமே சின்னம்மா கோஷம்.. சசிகலா மாயமாக உள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகம் எதிரில் உள்ள பெட்டி கடைகளில் பாக்கெட்டில் வைக்கும்படியான சசிகலாவின் போட்டோக்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

ஜெயலலிதாவின் போட்டோக்கள் குறைக்கப்பட்டு சசிகலாவின் புகைப்படங்கள் அதிக அளவில் விற்று வருகிறது. அதிமுக தொண்டர்கள் சின்னம்மா படம் கொடுங்கள் என்று கேட்டு வாங்கி செல்கின்றனர். அது மட்டும் அல்லாமல் சசிகலாவின் உருவம் பொறித்த பேனாக்கள், சுவரில் மாட்டும் பெரிய போட்டோக்கள், மேஜையில் வைக்கப்படும் படங்கள் விற்பனைக்காக அணி வகுத்துள்ளன.

எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட கட்சி அலுவலகம் முன்பு எம்.ஜி.ஆர் படங்கள் விற்பனைக்கு இல்ல. இறக்கும் வரை பொதுச்செயலாளராகவும், முதல்வராகவும் இருந்த ஜெயலலிதாவின் படங்கள் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. பொதுச்செயலாளராக நேற்று பொறுப்பேற்ற சசிகலாவின் படங்கள் மட்டும் விற்பனையில் சக்கை போடு போட்டு வருகிறது. என்ன கொடுமைம சார் இது என்கிறார் அதிமுக தொண்டர் ஒருவர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்