News
Loading...

சசிகலாவுக்கு சாணி மரியாதை… அதிமுக தொண்டர்கள் ஆவேசம்

சசிகலாவுக்கு சாணி மரியாதை… அதிமுக தொண்டர்கள் ஆவேசம்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ம் தேதி காலமானார். அவரது இறப்பில் மர்மம் உள்ளதாக பல்வேறு தரப்பினர் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.

ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக கட்சியை அவரின் அன்பு தோழி சசிகலா வழிநடத்த வேண்டும் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் சசிகலா தலைமை ஏற்க அதிமுக தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் ஜெயலலிதாவின் சாவுக்கு சசிகலாதான் காரணம் என்று குற்றம் சாட்டி வருகின்றனர். இதனர்ல அவருக்கு அதிமுகவில் நாளுக்கு நாள் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.

சசிகலாவுக்கு சாணி மரியாதை… அதிமுக தொண்டர்கள் ஆவேசம்

இந்த நிலையில் அதிமுக தலைவர்கள் கட்சியை வழி நடத்த வாருங்கள் என கூறி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர். இதனை பார்த்து ஆத்திரம் அடைந்த அதிமுக தொண்டர்கள் சசிகலாவின் உருவத்தின் மீது சாணியை வீசி தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...