News
Loading...

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் ஜனநாயகமுறைப்படி நடத்த வேண்டும்!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் ஜனநாயகமுறைப்படி நடத்த வேண்டும்!

னநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்பட்டு பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சசிகலா புஷ்பா கடிதம் எழுதியிருக்கிறார்.

பொதுச்செயலாளர் தேர்வுக்காக நடத்தப்படும் தேர்தலில் கட்சியின் சீனியர்களான மதுசூதனன், பண்ருட்டி ராமச்சந்திரன், பி.எச்.பாண்டியன், செங்கோட்டையன், தம்பிதுரை, கே.பி.முனுசாமி ஆகியவர்களில் ஒருவர் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட வேண்டும் என குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கும் கடிதம் அனுப்பியிருக்கிறார்.
அதில், ‘அ.தி.மு.கவில் வலிமை வாய்ந்த பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்வு விரைவில் நடக்க இருக்கிறது. கட்சியின் விதிகளுக்குட்பட்டு தேர்தல் நடத்தப்படுகிறதா என்பதை தேர்தல் ஆணையம் கண்காணிக்க வேண்டும்.

பொதுக் குழு உறுப்பினர்களுக்கு அழுத்தம் கொடுத்து, சிலர் பதவிக்கு வர நினைக்கிறார்கள். ஆணையத்தின் முழுக் கண்காணிப்பில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்’ என்பதையும் வலியுறுத்தியிருக்கிறார்.

தேர்தலில் போட்டியிட விரும்புகின்றவர்களுக்கு உரிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்’ எனவும் குறிப்பிட்டிருக்கும் சசிகலா புஷ்பா நான் ராஜ்யசபா எம்.பி என்கிற முறையில் பொதுக்குழு உறுப்பினர்தான். எனவே, பொதுக்குழு கூட்டத்தில் போலீஸ்  பந்தோபஸ்த்துடன் சென்று பங்கேற்பேன் என்கிறார். பார்ப்போம்…?!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...