News
Loading...

சசிகலா புஷ்பா கணவரை அடித்து நொறுக்கிய சசிகலா கும்பல்

சசிகலா புஷ்பா கணவரை அடித்து நொறுக்கிய சசிகலா கும்பல்
காயமடைந்த சசிகலா புஷ்பா கணவர் லிங்கேஸ்வர்

திமுக தலைமை அலுவலகத்தில் சசிகலா புஷ்பா ஆதரவாளர்களுக்கும் அதிமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வர் தாக்கப்பட்டதால், அவர் காயமடைந்தார்.

ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு புதன்கிழமை சசிகலா புஷ்பா எம்.பி. வருவதாக தகவல் பரவியது. இதனால் அங்கு பதற்றம் ஏற்படாமல் தவிர்க்க போலீஸார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வர திலகர் வந்தார்.

வியாழக்கிழமை அதிமுக பொதுக்குழு கூட உள்ள நிலையில், லிங்கேஸ்வர் ஒரு ஆவணத்தை கொடுக்க வந்திருப்பதை அறிந்த அதிமுகவினருக்கும், சசிகலா புஷ்பா கணவர் லிங்கேஸ்வர் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அதற்குப் பிறகு அது மோதலாக மாறியது. கட்சியினருக்குள் ஏற்பட்ட கைகலப்பில் லிங்கேஸ்வர திலகரர் மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

காயமடைந்த லிங்கேஸ்வரை காவலர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட மோதல்

சசிகலா புஷ்பா கணவரை அடித்து நொறுக்கிய சசிகலா கும்பல்

சசிகலா புஷ்பா கணவரை அடித்து நொறுக்கிய சசிகலா கும்பல்

சசிகலா புஷ்பா கணவரை அடித்து நொறுக்கிய சசிகலா கும்பல்

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...