News
Loading...

சசிகலா பொறுப்பேற்பு.. மத்திய அரசுக்கு எதிராக..! சசியின் அடுத்த பிளான்..!!

சசிகலா பொறுப்பேற்பு.. மத்திய அரசுக்கு எதிராக..! சசியின் அடுத்த பிளான்..!!

ஜெ.வின் மறைவிற்கு பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்படுவதாக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

சசிகலா பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு பல அதிரடி மாற்றங்கள் நிகழலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் சமீபத்தில் நடந்த வருமான வரி சோதனையில் தலைமைசெயலாளர் உட்பட பல அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் சிக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஜெ.வின் மறைவுக்கு பிறகு அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தவும், சசிகலா தலைமையிலான அரசை மத்தியில் உள்ள பா.ஜ அரசு விரும்பவில்லை அதனால் தான் தமிழகத்தின் மீது வருமான வரித்துறை மூலம் அழுத்தம் கொடுப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன.

பா.ஜ அரசுக்கு தங்களது எதிர்ப்பை காட்டினால் தான் இந்த ரெய்டில் இருந்து தப்பிக்க முடியும் என்று நிர்வாகிகள் சிலர் கருதுவதாக கூறப்படுகிறது.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஜெயலலிதாவுக்கு இரங்கல் கூட்டம் நடத்த அதிமுகவில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த கூட்டத்திற்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் உள்பட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இரங்கல் கூட்டத்திற்கு வருகை தரும் தலைவர்களிடம் தமிழக அரசு நிலைமை எடுத்துக் கூறி தங்களுக்கு ஆதரவளிக்குமாறும் கோரிக்கை விடுக்கப் போவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் பா.ஜ அரசுக்கு எதிரான தலைவர்களுடன் கைகோர்த்து தங்களது எதிர்ப்பை தெரிவிக்கலாம் என்பது அதிமுகவினரின் அரசியல் திட்டம் என கூறப்படுகிறது.

இதற்காகவே டெல்லியில் ஜெயலலிதாவின் இரங்கல் கூட்டம் நடத்தப்படுவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்