News
Loading...

ஜெயிலில் சேகர் ரெட்டி உயிருக்கு ஆபத்து…!? அச்சத்தில் திக், திக். திக்..!!

ஜெயிலில் சேகர் ரெட்டி உயிருக்கு ஆபத்து…!? அச்சத்தில் திக், திக். திக்..!!

திமுகவின் பவா் செண்டா்களில் ஒருவரான சேகா் ரெட்டி,  அதிமுகவின் ஒட்டு மொத்த அமைச்சா்களின் பினாமியாக இருந்து வந்தாராம்.

இவா் முதல்வா் ஒபிஎஸ் உள்ளிட்ட தலைமை செயலாளா் ராமமோகன ராவ் ஆகியோரின் பணங்களை  தொழிலில் பினாமியாக முதலீடு செய்தும் வந்தாராம்.

சேகா் ரெட்டியின் போன்கள் டேப் செய்தபோது,  தமிழக தலைமை செயலாளா் உள்ளிட்ட அமைச்சா்கள், அமைச்சா்களின் மகன்கள் மற்றும் சசிகலா உள்ளிட்ட குடும்பத்தினா் சிக்கினார்களாம்.

கட்டி கட்டியாக தங்கம், பலகோடி பணம் சிக்கியது. இருந்தாலும் நேற்று வரை அவா் மிகவும் தைரியமாக ஜெயிலையே  நட்சத்திர ஓட்டலாக பயன்படுத்தி வந்தார்.

அதிமுக பொது செயலாளராக சசிகலா தோ்வு செய்யப்பட்ட தகவல் அறிந்த சேகா் ரெட்டி, பயம் சூழ்ந்த நிலையில் உள்ளாராம்.

தமிழகத்தில் பலா் வருமானவரித்துறையிடம் சிக்க தான்தான் காரணம் என்று புலம்பும் சேகா் ரெட்டி, தன் உயிருக்கே பாதுகாப்பு இல்லை என்றும் கருதுகிறாராம்.

இந்த நிலையில் தமிழக சிறை வேண்டாம். வேறு மாநில சிறைக்கு என்னை மாற்றுங்கள் என்று நீதி மன்றத்தில் மனு அளி்க்க கூட தயங்காத நிலையில் உள்ளாராம்.

நான் மாட்டியதால் பலா் சிக்கலாம் என்பதால், அவா்களால் எனது உயிருக்கு கூட ஆபத்து ஏற்படலாம் என்கிற அச்சத்தில்  உள்ளாராம் சேகா் ரெட்டி . இவ்வாறு ஜெயில் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்