News
Loading...

மணல் கொள்ளை தொழிலதிபர் சேகர் ரெட்டி நீக்கம்! சந்திரபாபு நாயுடு அதிரடி!

மணல் கொள்ளை தொழிலதிபர் சேகர் ரெட்டி நீக்கம்! சந்திரபாபு நாயுடு அதிரடி நடவடிக்கை!

மிழகத்தின் பிரபல மணல் கொள்ளை தொழிலதிபர் சேகர் ரெட்டி  திருப்பதி தேவஸ்தான போர்டில்  இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கான நடவடிக்கையை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிரடியாக எடுத்திருக்கிறார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சேகர் ரெட்டி என்கிற தொழில் அதிபர் வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினர்.

இவரது சொந்த ஊர் வேலூர் காட்பாடி காந்தி நகர் பகுதியில் உள்ளது. ஆனால் பெரும்பாலும் அவர் சென்னை நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் அடுக்குமாடி அலுவலகங்களை நடத்திவருகிறார். அவரது ஆரம்பகட்ட தொழில் வால் பேப்பர் ஒட்டுவது. அதற்கு பின்னர் அனுமதி இல்லாமல் மணல் அள்ளி வெளிநாடுகளுக்கு கடத்துவது.

இதனால் சசிகலா உள்ளிட்டவர்களுக்கு பினாமியாக செயல்பட்டார். போயஸ் தோட்ட இல்லத்துக்கும் மிகவும் நெருக்கமானார்.
இந்நிலையில் ஜெ..மறைந்து அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஈரம் காய்வதற்கு முன் சேகர் ரெட்டியின் அனைத்து வீடுகள், அலுவலகங்களில் ஐ.டி.ரெய்டு நடத்தி நூறு கோடி பணம், தங்கம், ஆவணங்களை கைபற்றியுள்ளனர்.
இது சசிகலாவை மிரட்டுவதற்காக நடந்த ரெய்டு ஓரிரு நாட்களில் சரியாகிவிடும் என்று சசி ஆதரவாளர்கள் பேசிக்கொண்டனர். ஆனால், பிரச்சனை முடிந்தபாடில்லை.

சேகர் ரெட்டி திருப்பதி கோவில் தேவஸ்தான போர்டில் உறுப்பினராக உள்ளார்.
அந்த பதவியை வைத்துக்கொண்டுதான் தமிழகத்தில் உள்ள பல முக்க்கியஸ்தர்களை கரெக்ட் செய்து வந்தார்.இந்நிலையில் சேகர் ரெட்டி கடுமையான ரெய்டுக்கு ஆளாக்கப்பட்டிருக்கும் நிலையில் ஆந்திர அரசும் அவர் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறது.

அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு சேகர் ரெட்டியை தேவஸ்தான போர்டு உறுப்பினர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கி ஷாக் கொடுத்துள்ளார்.
அ.தி.மு.க.வில் உறுப்பினர் கூட ஆகாத சேகர் ரெட்டி அக்கட்சியின் மந்திரிகளையும், முந்திரிகளையும் ஆட்டிப்படைப்பார். அவரது அலுவலகத்தில் சைரன் கார்கள் எப்போதும் முகாம் இட்டிருக்கும்.

தற்போது அதே சேகர் ரெட்டிக்கு பிரச்சனை என்றதும் ஆளாளுக்கு துண்டை காணோம், துணியை காணோம் என்று ஓடி ஒளிந்துக்கொண்டனர். ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். சேகர் ரெட்டிக்கு கிடைத்துள்ள இந்த ரெய்டு, பதவி நீக்கம் எல்லாம் மத்திய அரசு இந்த நாட்டு மக்களுக்கு எதையோ சொல்லவிரும்புகிறது  என்பது மட்டும்  நன்றாகத் தெரிகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்