News
Loading...

கிரண்பேடி நிர்வகித்து வந்த வாட்ஸ் ஆப் குழுவில் ஆபாச வீடியோ அனுப்பியதாக புகார்

கிரண்பேடி நிர்வகித்து வந்த வாட்ஸ் ஆப் குழுவில் ஆபாச வீடியோ அனுப்பியதாக புகார்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நிர்வகித்து வந்த வாட்ஸ் ஆப் குழுவில், ஆபாச வீடியோ அனுப்பியதாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். காவல் துறை, பொதுப்பணித் துறை, நகராட்சி துறை உள்ளிட்ட அனைத்து துறை உயரதிகாரிகளுக்கு, உத்தரவு பிறப்பித்தல் மற்றும் சில நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வாட்ஸ் ஆப் குழு ஒன்றை உருவாக்கி அதனை நிர்வகித்து வந்தார். 

இந்நிலையில், நேற்றிரவு, அந்த குழுவில் உறுப்பினராக உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சிவக்குமார், தன் செல்போனிலிருந்து வாட்ஸ் ஆப் குழுவிற்கு ஆபாச வீடியோ அனுப்பியதாக கூறப்படுகிறது. இதைப் பார்த்து ஆளுநர் கிரண் பேடி மட்டும் அல்லாமல், மற்ற அதிகாரிகளும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சிவக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. 

இதையடுத்து, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பதவியிலிருந்து அவர் உடனடியாக இடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், சிவக்குமார் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு, முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராஜீவ் ரஞ்சன் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்