News
Loading...

குழந்தை பருவத்தில் செக்ஸ் தொல்லையால் பாதிக்கப்பட்டேன் : நடிகை சோனம் கபூர்

"குழந்தை பருவத்தில் செக்ஸ் தொல்லையால் பாதிக்கப்பட்டேன்": நடிகை சோனம் கபூர்

குழந்தை பருவத்தில் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகியுள்ளதாக பிரபல பாலிவுட் நடிகையான சோனம் கபூர் மனம் திறந்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகரான அனில் கபூரின் மகளான சோனம் கபூர்,எப்போதும் வெளிப்படையாக தனது கருத்துகளை கூறக்கூடியவர். இதனால் பல சர்ச்சைகளில் அவர் சிக்கியிருந்தாலும், அதற்கெல்லாம் அவர் கவலைப்பட்டதில்லை. இந்நிலையில் தன்னுடைய சிறு வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளதாக சோனம் கபூர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், இந்த கருத்தை தெரிவித்துள்ளார். தனது சிறிய வயதில் செக்ஸ் தொல்லைக்கு ஆளானதாகவும், அது ஒரு அதிர்ச்சி அளிக்கக் கூடிய கெட்ட கனவு போன்ற ஒரு சம்பவம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்த வீடியோ உங்கள் பார்வைக்காக..!



முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...