News
Loading...

எம்.ஜி.ஆர் பாணியில் அதிமுகவை.. திமுகவுடன் இணைக்க முயன்ற ஜெ.,.!??

எம்.ஜி.ஆர் பாணியில் அதிமுகவை.. திமுகவுடன் இணைக்க முயன்ற ஜெ.,.!??

டந்த 2011 தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. அப்போதே ஜெயலலிதா தன் உடல்நிலை சரியில்லாததை உணர்ந்ததாக தெரிய வருகிறது.

இந்நிலையில் தான் கொடநாடு பங்களாவில் 15 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றதாக கூறப்பட்டது. அப்போது எதிர்கட்சிகள் அனைத்தும் தலைமை செயலகத்தை கொடநாட்டிற்கே மாற்றி விட்டார்கள் என்று தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.

இந்த சிகிச்சைக்குப் பிறகு ஜெயலலிதா தனது சுற்றுப்பயணங்களை எல்லாம் குறைத்துக் கொண்டதாகவும் தெரிகிறது. தனது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தான் 2016 தேர்தல் பிரச்சாரத்தையும் ஜெ. குறைந்து கொண்டார்.

2016ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பே ஜெயலலிதா தனது உடல்நிலை மிகவும் மோசமானதை அறிந்து தனக்கு பிறகு தலைமை ஏற்க யாரும் இல்லை என்றும் வருந்தியதாக தெரிகிறது.

தோழி சசிகலா குடும்பத்தினரால் கட்சிக்கு பாதிப்பு ஏற்படலாம் என்றும் அவர்களிடம் கட்சியும், ஆட்சியும் போகக்கூடாது என்று எண்ணியதாகவும் அதனால் பல திடுக்கிடும் முடிவுகளை எடுக்க ஜெயலலிதா துணிந்ததாக கூறப்படுகிறது.

எம்.ஜி.ஆர் பாணியில் தாய்கழகத்துடன் அதிமுகவை இணைத்து விடலாம் அப்போது தனக்கு பிடித்தமான மு.க.ஸ்டாலின் அனைத்து பொறுப்புகளையும் பார்த்து கொள்வார் என்கிற திட்டத்தை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இலவு கிளி காத்திருந்தது போல் நமக்கு பட்டை நாமமா என்று கோபமடைந்த சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் அன்று முதல் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் குளறுபடிகளை செய்ய தொடங்கினர்.

இதன் காரணமாகவே முதல்வராக வெற்றி பெற்று, சிறையில் இருந்து வந்தும் கூட, உடல்நலம் இன்றி கார்டனிலேயே இருக்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையே அவர் இறப்பதற்கு காரணமாகிபோனது.

 அதிமுகவை நன்கு அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தகவல் நம்பமுடியாததாக இருந்தாலும் கூட, ஜெயலலிதா தனது உடல்நிலை கருதி கூட, இந்த முடிவை மனதுக்குள் எண்ணியிருக்கலாமோ என்று எண்ணத்தோன்றுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...