News
Loading...

முதலமைச்சரை தமிழக மக்கள் தான் தேர்தெடுக்க வேண்டும்! உடனடித் தேவை பொதுத் தேர்தல்!

முதலமைச்சரை தமிழக மக்கள் தான் தேர்தெடுக்க வேண்டும்! உடனடித் தேவை பொதுத் தேர்தல்!

சிகலாவை  பொதுச்செயலாளராக அதிமுக மூத்த தலைவர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுத்தாலும் பொதுமக்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு இருப்பதாக தெரியவில்லை.

ஆனால் இது அதிமுகவின் உட்கட்சி விவகாரம் என பெரும்பாலானவர்கள் கருத்து சொல்கின்றனர். அதே நேரம் முதலமைச்சராக அவரை நியமிப்பது என்பது அதிமுகவினரின் தனிப்பட்ட உரிமை அல்ல.

காரணம் அதிமுகவின் எம்.எல்.ஏக்களை நம்பி யாரும் அக்கட்சிக்கு வாக்களிக்கவில்லை. ஜெயலலிதாவிற்காகத் தான் வாக்களித்தார்கள்.

அவரே இன்று இல்லை. இந்த நிலையில்  பொதுத் தேர்தலை நடத்துவது தான் சரியானதாக இருக்கும் என்ற  கருத்தை வலியுறுத்துகிறார் திராவிட இயக்க தமிழர் பேரவையின் சுப.வீரபாண்டியன்.

தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவும் இந்த கால கட்டத்தில் சுப.வீரபாண்டியன் தனது மனதில் பட்டதை பேசிவிடமுடியாது.

காரணம் இவர் திமுக தலைமைக்கு நெருக்கமானவர். தீவிர ஆதரவாளர். எனவே இவரது கருத்து திமுகவின் கருத்தாகவே பார்க்கப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்