பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என கடந்த மாதம் 8ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இதனைத்தொடர்ந்து நாடுமுழுவதும் கடும் பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. அத்தியாவசிய செலவுக்குக்கூட பணம் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
மேலும் ஒரு நாளைக்கு 2,000 ரூபாய் மட்டுமே ஏடிஎம் மையங்களில் எடுக்கும் நிலையில், அவற்றிற்கு சில்லரை கிடைக்காமல் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ரொக்கமில்லா பணப்பரிமாற்றத்தின் அடிப்படையில் கிராமங்களில் ஸ்வைப் மெஷின் மூலம் பணப்பரிமாற்ற திட்டத்தை தொடங்க மத்திய அரசு முனைந்துள்ளது.
இதற்காக 10,000க்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட சுமார் ஒரு லட்சம் கிராமங்களுக்கு தலா 2 ஸ்வைப் மெஷின் (POS) இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய நிதித்துறை அமைச்சகம் தன்னுடைய டுவிட்டர் பதிவில் இன்று தெரிவித்துள்ளது.1 Lakh villages with population less than 10,000 to get 2 PoS machines free of cost, supported through financial inclusion fund.— Ministry of Finance (@FinMinIndia) December 8, 2016
இந்த ஸ்வைப் மெஷின் யாருக்கு வழங்கப்படும்? வங்கிகளுக்கா அல்லது போஸ்ட் ஆபீஸ்களுக்கா என்ற விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை. அதுகுறித்த விபரங்களை மத்திய அரசு பின்னர் அறிவிக்கும் என்று தெரிகிறது.
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.