News
Loading...

டாஸ்மாக் காட்டிக்கொடுத்த ரயில் கொள்ளையர்கள்!

டாஸ்மாக் காட்டிக்கொடுத்த ரயில் கொள்ளையர்கள்!

ழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் மீதான தடை ஒரு வகையில் தமிழக சி.பி.சி.ஐ..டி போலிசாருக்கு  மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதியன்று சேலத்தில் இருந்து விருதாச்சலம் வழியாக சென்னை எழும்பூருக்கு சென்ற ரயிலில் மேற்கூரையை கட் பண்ணி ரூ.5.75 கோடி கொள்ளையடிக்கப்பட்டது.

ஆங்கிலப்படத்துக்கு நிகரான இந்த கொள்ளை தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.இந்த வழக்கை சி.பி.சி.ஐ..டி. போலிஸ் கையாண்டது.

அப்படியிருந்தும் அவர்களுக்கு ஒரு துளி ஆதாரம்கூட கிடைக்கவில்லை.
இந்நிலையில் பழைய ரூபாய் நோட்டு செல்லாத விவகாரத்தினால் தற்போது ரயில் கொள்ளையர்களை அடையாளம் கண்டுள்ளனர்.

கடந்த நவம்பர் மாதம் 15-ந்தேதி அன்று சேலம் புதிய பஸ் நிலையம் 5 ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் ரூ.500 மற்றும் ரூ. 1000 நோட்டுகளை வட மாநிலத்தை சேர்ந்த சிலர் மாற்ற முயன்று அவர்களுக்கும், டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

பின்னர் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் 100 ரூபாய் நோட்டை கொடுத்து மது வாங்கிக் கொண்டு, டாஸ்மாக் கடையின் அருகே உள்ள பாரில் அமர்ந்து மது குடித்தனர்.

அப்போது போதை தலைக்கேறிய நிலையில் ரெயில் கொள்ளை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு வங்கி கொள்ளை சம்பவத்தை பற்றி பேசியிருக்கிறார்கள்.

இது பற்றிய தகவல் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கிடைத்தது. விசாரித்தபோது 2014-ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பன அள்ளி அருகே உள்ள பரோடா வங்கியில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதனால் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு இந்த வங்கி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களின் புகைப்படங்கள் கிடைத்தது.

இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் மேற்கு வங்காளம் மற்றும் சத்தீஷ்கர் மாநிலத்தை சேர்ந்த ஒரு கும்பல் ரெயில் கொள்ளை மற்றும் வங்கி கொள்ளையில் ஈடுபடுவதை உறுதிபடுத்தினார்கள்.

இந்த கொள்ளை கும்பல்கள் ரெயில் பெட்டிகளில் இணைக்கப்பட்டிருக்கும் சரக்கு பெட்டியில் புகுந்து அங்கிருக்கும் பொருட்களை கொள்ளையடிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் கைது செய்யப்பட்ட நபர்களின் தகவல்களை சேகரித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளார்கள்.

மேலும் சேலத்தில் இருந்து சென்னை சென்ற எழும்பூர் ரெயிலில் கொள்ளை அடித்ததும் இந்த கும்பல் தான் என சி.பி.சி.ஐ.டி போலீசார் உறுதி செய்தனர்.

சென்னை, பெங்களூர், ஆந்திரா, சேலம், கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ரெயில் நிலையங்கள் மற்றும் பஸ்நிலையங்கள், பொது இடங்களில் கொள்ளையர்களின் 5 உருவபடங்களை வைத்து சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

ரெயில் கொள்ளை குறித்து போலீஸ் நிலையங்களில் தகவல் தெரிவித்தால் அந்த தகவல்களை ரகசியம் காக்கப்படும் என்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்களுக்கு அரசின் சார்பில் சன்மானம் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளனர். இங்கிலிஸ் பாணி கொள்ளையர்கள் விரைவில் பிடிபடுவார்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...