News
Loading...

தந்தி டிவி ரங்கராஜ் பாண்டேவின் கேள்விக்கென்ன பதில்!! தீபாவின் பேட்டியை தடை செய்தது ஏன்?..

தந்தி டிவி ரங்கராஜ் பாண்டேவின் கேள்விக்கென்ன பதில்!! தீபாவின் பேட்டியை தடை செய்தது ஏன்?..

றைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தான் தற்போது ஊடகங்களின் ஹாட் டாக். சசிகலாவை களத்தில் எதிர்க்கும் தைரியம் தற்போதைக்கு அவருக்கு மட்டுமே உள்ளது.

ஆம், அதிமுகவின் சிம்மசொப்பனமாக விளங்கிய அக்கட்சியின் பொதுசெயலாளர் ஜெயலலிதா மறைந்த பிறகு, அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக சசிகலா அப்பதவியை ஏற்க கட்சி எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தினர்.


தந்தி டிவி ரங்கராஜ் பாண்டேவின் கேள்விக்கென்ன பதில்!! தீபாவின் பேட்டியை தடை செய்தது ஏன்?..

ஆனால், இதனை எதிர்த்து, சசிகலா அப்பதவிக்கு வர கூடாது என்பதற்காக தான் அரசியலில் குதிக்கப்போவதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அறிவித்தார்.

இதனையடுத்து, அவரை பல ஊடங்கள் நேர்காணல் நிகழ்ச்சிகளுக்கு அழைத்து பேட்டி எடுத்து வருகிறது. இதேபோல் தந்தி தொலைக்காட்சியும் தனது நேர்காணல் நிகழ்ச்சிக்கு அழைத்து தீபாவிடம் பேட்டி எடுத்தது. ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு கொடுக்கப்பட்ட விளம்பரங்களே படு அதிரடியாக இருந்தது. இதனால், இந்த நிகழ்ச்சியை காண மக்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

ஆனால், இந்த நிகழ்ச்சி கூறியபடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை, இதனால் அனைவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. இதற்கு பதிலாக அதிமுக எம்.எல்,ஏ தங்கமணியின் பேட்டி ஒளிபரப்பப்பட்டது.

தீபாவின் நிகழ்ச்சி தடை செய்யப்பட்டதற்கு காரணம், மேலிடத்தின் வற்புறுத்தலா, அல்லது TRP ரேட்டிங்கை உயர்த்த தொலைக்காட்சியின் தந்திரமா என பல கேள்விகள் எழுந்தன.

இந்நிலையில் , இப்படி திடீர் பல்டி அடித்த தந்தி தொலைக்காட்சியையும், அந்த நேர்காணல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ரங்கராஜ் பாண்டேவையும் வலைதளங்களில் நெட்டீசன்கள் வறுத்தெடுக்கின்றனர்.


முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...