News
Loading...

ஹரித்வாரில் திருவள்ளுவர் சிலை இன்று திறப்பு

ஹரித்வாரில் திருவள்ளுவர் சிலை இன்று திறப்பு

த்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் திருவள்ளுவரின் சிலை இன்று மாலை திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாஜக எம்பி தருண் விஜய்யின் முயற்சியாக உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கடந்த ஜுன் 30-ம் தேதி திருவள்ளுவரின் சிலை நிறுவ ஏற்பாடு செய்யப்பட்டது. ஹரித்துவாரின் கங்கை கரையோரம் 12 அடி உயர சிலையை திறக்க சில மதவாத அமைப்புகள் ஏதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து திருவள்ளுவர் சிலை ஹரித்துவாரின் பொதுப்பணித்துறை அலுவலகத்தில், பிளாஸ்டிக் துணியில் மூடப்பட்டு வைக்கப்படது. தமிழகத்தைச் சேர்ந்த கட்சிகள் இந்த சம்பவத்துக்கு கடும் ஏதிர்ப்பு தெரிவித்தனர்.இதனையடுத்து உத்தரகாண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத், 'திருவள்ளுவர் சிலை ஹரித்துவாரில் அமைக்கப்படும்' என உறுதி அளித்தார்.

இந்தநிலையில் உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் ஹரீஷ் ராவத் திருவள்ளுவர் சிலையை இன்று மாலை 5 மணியளவில் திறந்து வைப்பார் என அம்மாநில உயரதிகாரி மீனாட்சி சுந்தரம் தெரிவித்துள்ளார். மேலும் ஹரித்வாரில் கங்கைக் கரை ஓரம் திருவள்ளுவர் பெயரில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படடும் என்றும் அவர் தெரிவித்தார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்