News
Loading...

திருவண்ணாமலையில் இன்று மாலை 2,668 அடி உயரத்தில் மகா தீபம்!

திருவண்ணாமலையில் கொட்டும் மழையில் பக்தர்கள் அரோகரா?! இன்று மாலை 2,668 அடி உயரத்தில் மகா தீபம்!

வர்தா புயலின் தாக்கம், வடதமிழகத்தின் திருவண்ணாமலையில் பலத்த மழை கொட்டியது. இன்று அண்ணாமலையாருக்காக திருவண்ணாமலை மலையில் 2,668 அடி உயரத்தில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.

இதனை நேரில் காண பல்வேறு பகுதியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கொட்டும் மழையிலும் குவிந்துள்ளனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபதிருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பின்னர் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்ற பக்தியுடன் முழங்கிய லட்சக்கணக்கான பக்தர்களுக்கு நடுவில் தேர்கள் அசைந்தபடி பவனி வந்தன.

தீப விழாவின் முக்கியமானதாக கருதப்படும் 10-வது நாளான இன்று மாலை 2,668 அடி உயர அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.

அதனையொட்டி, அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை செய்யப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு கோவில் மூலவர் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

மகா தீபத்துக்கு, சுமார் 20 லட்சம் பக்தர்கள் வரக்கூடும் என்று கருதப்படுவதால், பாதுகாப்பு பணிகளுக்காக 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆளில்லா குட்டி விமானத்தின் கேமிரா மூலம் தீவிரமாக கண்காணிப்பு பணி நடக்கிறது.

மகா தீபம் முடிந்து மறுதினம் செவ்வாய்கிழமை பவுர்ணமி தொடங்குவதால் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.