News
Loading...

அம்மா மரணத்தில் தமிழக மக்களுக்கு சந்தேகம்: நீதி தேவை : சசிகலா புஷ்பா


''அம்மா மரணத்தில் சசிகலாவையும், அவரது குடும்பத்தினரையும் தமிழக மக்கள் சந்தேகிக்கின்றனர். ஆதலால், அம்மா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். நீதி வேண்டும்'' என்று அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட எம்.பி., சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார்.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிமுகவில் இருந்து ஜெயலலிதாவால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியேற்றப்பட்ட சசிகலா புஷ்பா, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார்.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்திலும் ரிட் மனு ஒன்றை சசிகலா புஷ்பா தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ''அம்மா மரணத்தில் சசிகலாவையும், அவரது குடும்பத்தினரையும் தமிழக மக்கள் சந்தேகிக்கின்றனர். ஆதலால், அம்மா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். நீதி வேண்டும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து மரணம் அடைந்த நாள் வரை எந்த தகவலையும் வெளியிடவில்லை. என்ன நடந்தது, என்ன மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது போன்ற தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆதலால், அம்மா மரணத்தில் சிபிஐ விசாரணை தேவை'' என்று வலியுறுத்தியுள்ளார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...