News
Loading...

இன்றைய ராசிபலன் : 14-12-16

இன்றைய ராசிபலன் : 14-12-16

14-12-2016, துர்முகி வருடம், கார்த்திகை மாதம் 29-ஆம் தேதி, புதன்கிழமை, தேய்பிறை பிரதமை: பின்னிரவு 2.08 மணி வரை; பிறகு துவிதியை. மிருகசீரிஷம்: மாலை 6.52 மணி வரை; பிறகு திருவாதிரை. சித்தயோகம். பயணம் தவிர்க்கவும். முக்கியப்பணிகளை ஒத்திப்போடவும்.

நல்லநேரம்: காலை 9 முதல் 10 மணிவரை; பிற்பகல் 2 முதல் 3 மணிவரை. பிற்பகல் 4 முதல் 5 மணிவரை;

ராகுகாலம்: நண்பகல் 12.00 முதல் 1.30 மணிவரை.

எமகண்டம்: காலை 7.30 முதல் 9.00 மணிவரை.

குளிகை: முற்பகல் 10.30 முதல் 12.00 மணிவரை.

வாரசூலை: வடக்கு.

அதிர்ஷ்டஎண்கள்: 5, 8, 9, 4.

தினப்பலன்:

மேஷம்: மனத்துணிச்சல் கூடும். காரியத்தில் வெற்றி கிட்டும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள்.

ரிஷபம்: ஒரு எண்ணம் ஈடேறும். பணம் வரும். குடும்பத்தில் குதூகலம் கூடும்.

மிதுனம்: காரியம் தாமதம் ஆகும். தந்தை நலனில் கவனம் தேவை. எதிர்ப்புக்கள் இருக்கும்.

கடகம்: சிறு சங்கடம் ஏற்படும். உடன்பிறந்தவர்களால் செலவுகளும் மன அமைதிக்குறைவும் உண்டாகும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும்.

சிம்மம்: நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். நண்பர்கள் உதவுவார்கள். வாழ்க்கைத்துணை நலனில் கவனம் தேவை.

கன்னி: காரியத்தில் வெற்றி கிட்டும். பண வருவாய் கூடும். குடும்பத்தில் அமைதி காணலாம்.

துலாம்: அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள். நல்ல தகவல் கிடைக்கும்.

விருச்சிகம்: சிறு சங்கடம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் அலைச்சலைத் தவிர்க்கவும்.

தனுசு: எதிர்ப்புக்கள் விலகும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். நல்லவர்களின் தொடர்பு பயன்படும்.

மகரம்: பண வரவுகூடும். ஒரு காரியம் நிறைவேறும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படும். வீண்வம்பு கூடாது.

கும்பம்: எதிலும் நிதானத்துடன் யோசித்து ஈடுபடுவது நல்லது. உடல் நலனில் கவனம் தேவை. மக்களால் மன அமைதி குறையும்.

மீனம்: எதிரிகள் இருப்பார்கள் என்றாலும் சமாளிப்பீர்கள். நிலபுலங்கள் விஷயத்தில் கவனம் தேவை. வீண் செலவுகளைத் தவிர்க்கவும்.

பொதுப்பலன்: புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு காரியத்தில் வெற்றி கிட்டும். பண நடமாட்டம் அதிகமாகும். மதிப்பு உயரும். நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபார நுணுக்கம் தெரியவரும். இயந்திரப்பணிகள் லாபம் தரும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்