News
Loading...

இன்றைய ராசிபலன் 18-12-16

இன்றைய ராசிபலன் 18-12-16

18-12-2016, துர்முகி வருடம், மார்கழி மாதம் 3-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை பஞ்சமி: பிற்பகல் 5.57 மணிவரை; பிறகு சஷ்டி. ஆயில்யம்: பிற்பகல் 12.40 மணி வரை; பிறகு மகம். ஆயில்யம் உள்ளவரை சித்தயோகம். பிறகு மரணயோகம். முற்பகலில் யோகா, வேதம் பயிலலாம். மருந்து தயாரிக்கலாம். நண்பர்கள், உறவினர்களைச் சந்தித்துப் பேசலாம். பயணம் தவிர்ப்பது நல்லது.

நல்லநேரம்: காலை 7 முதல் 8 மணிவரை; முற்பகல் 11 முதல் 12 மணிவரை. பிற்பகல் 2 முதல் 3 மணிவரை;

ராகுகாலம்: பிற்பகல் 4.30 முதல் 6.00 மணிவரை.

எமகண்டம்: நண்பகல் 12 முதல் 1.30 மணிவரை.

குளிகை: பிற்பகல் 3.00 முதல் 4.30 மணிவரை.

வாரசூலை: மேற்கு.

அதிர்ஷ்டஎண்கள்: 9, 3, 5, 2.

தினப்பலன்:

மேஷம்: நண்பர்கள், உறவினர்களின் சந்திப்பு பயன்படும். புதிய பொருள் சேரும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும்.

ரிஷபம்: நல்ல தகவல் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். அலைச்சல் வீண்போகாது.

மிதுனம்: பண வரவு கூடும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தந்தை நலனில் கவனம் தேவை.

கடகம்: வியாபாரம் பெருகும். சிந்தனையில் தெளிவு பிறக்கும். பிற்பகலில் சிறு சங்கடம் உண்டாகும். புதியவர்களிடம் எச்சரிக்கை தேவை.

சிம்மம்: செலவுகள் அதிகரிக்கும். இடமாற்றம் உண்டாகும். பிறரிடம் சுமுகமாகப் பேசுவது நல்லது. கோபம் கூடாது.

கன்னி: ஒரு எண்ணம் நிறைவேறும். ஜலப்பொருள் லாபம் தரும். பிற்பகலில் செலவுகள் அதிகமாகும்.

துலாம்: ஒரு காரியம் ஈடேறும். மதிப்பு உயரும். மக்களால் சிறு சங்கடம் ஏற்படும்.

விருச்சிகம்: தொலைதூரத் தொடர்பு பயன்படும். நண்பர்கள், உறவினர்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும்.

தனுசு: உடல் நலனில் கவனம் தேவை. வீண்விவகாரங்களில் தலையிடலாகாது. ஆன்மிகப்பணிகளில் ஈடுபடுவதன் மூலம் அமைதி காணலாம்.

மகரம்: நல்லவர்களின் தொடர்பு பயன்படும். குடும்பத்தில் சலசலப்புக்கள் ஏற்படும். வீண்வம்பு கூடாது.

கும்பம்: எதிர்ப்புக்கள் விலகும். வியாபாரம் பெருகும். ஆன்மிகச் சிந்தனை கூடும்.

மீனம்: ஒரு எண்ணம் நிறைவேறும். பிரச்னைகள் குறையும். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது.

பொதுப்பலன்: பரணி, பூரம், பூராட நட்சத்திரக்காரர்களுக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். நண்பர்கள் உதவுவார்கள். கலைத்துறை ஊக்கம் தரும். புதிய பொருட்சேர்க்கை நிகழும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்