News
Loading...

மோடி உரை : புதிய 1,000 ரூபாய் நோட்டு பற்றிய அறிவிப்பு வெளியாகலாம்

மோடி உரை : புதிய 1,000 ரூபாய் நோட்டு பற்றிய அறிவிப்பு வெளியாகலாம்

ழைய ரூபாய் நோட்டுகளான ரூ.500 மற்றும் ரூ.1,000 செல்லாது என மத்திய அரசின் அறிவிப்பைத்தொடர்ந்து, நாடுமுழுவதும் பணத்தட்டுபாட்டில் மக்கள் தவித்து வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து, பழை ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. ஆனால், பணத்தட்டுப்பாடு மட்டும் இன்னமும் குறையாமல் மக்களை ஆட்டிப்படைத்து வருகிறது.

இந்த பணத்தட்டுப்பாட்டை போக்க மத்திய நிதியமைச்சகத்துடன் சேர்ந்து ரிசர்வ் வங்கி பல்வேறு ஆலோசனையில் ஈடுபட்டுவருகிறது. மேலும், வெளிநாட்டில் புதிய ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து, பிரதமர் மோடி இதுதொடர்பாக நாளை மக்கள் முன் உரையாற்ற இருக்கிறார். இந்த உரையில் பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. வங்கிகள் மற்றும் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுக்க தற்போதுள்ள வரைமுறையை தளர்த்தவும், புதிய ரூபாய் நோட்டுகள் குறித்த அறிவிப்புகளும் வெளியாகலாம் என்று தெரிகிறது.

அதேபோல், புதிய ரூ.2,000 நோட்டுகள் வரும் 30ம் தேதி வரைதான் செல்லும் எனவும், ரூ1,000 புதிய நோட்டுகள் புழக்கத்தில் விடப்போவதாகவும், அதனால் பழைய ரூ2,000 நோட்டுகளை அதிகமாக வைக்காதீங்க எனவும், புத்தாண்டு முதல், புதிய 1,000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படலாம் என்றும் ஒரு, தகவல் வாட்ஸ்அப்பில் புகைப்படம் ஒன்று வைரலாக பரவிவந்தது.

இந்நிலையில், நாளை இரவு பிரதமர் மோடி மீண்டும் டிவி சேனல் வாயிலாக பேசப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு உள்ளது. மோடி உரையின்போது, புதிய, 1,000 ரூபாய் நோட்டு பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இத்தகவலால், வாட்ஸ்அப்பில் போலியாக ரூ.1,000 நோட்டுகள் வெளியானது உண்மையாகப்போகிறதா என மக்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்