News
Loading...

மைனர் வீராங்கனையை பாலியல் பலாத்காரம் செய்த பயிற்சியாளர்!

மைனர் வீராங்கனையை பாலியல் பலாத்காரம் செய்த பயிற்சியாளர்!

கோடா: மைனர் கைபந்து வீராங்கனையை ராஜஸ்தானில் பயிற்சியாளர் தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக தலித் மாணவி ஒருவர் பயிற்சி ஆசிரியரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார். உடற்பயிற்சி ஆசிரியரான மங்ரோல் டவுனை சேர்ந்த அப்துல் ஹானிப் (40 வயது) மீது அரசு பள்ளி மாணவி ஒருவர் பாலியல் புகார் கொடுத்து உள்ளார்.

பள்ளி கைப்பந்து அணியில் அந்த சிறுமி விளையாடி வந்துள்ளார். பல நகரங்களில் நடக்கும் போட்டிக்கு அவரை அழைத்து செல்லும் போதெல்லாம், ஹோட்டல் அறையில் பாலியல் பலாத்காரம் செய்து வந்தார். என அந்த சிறுமி புகார் அளித்துள்ளார்.

இதற்காக அவர் போலியான ஐடியை பயன்படுத்தியதும் தற்போது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆனால் அவர் கைது செய்யப்படவில்லை.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்