News
Loading...

13 மாவட்ட தலை நகரங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற உத்தரவு

13 மாவட்ட தலை நகரங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற உத்தரவு

துரை, விருதுநகர், தேனி , ராமநாதபுரம் உள்ளிட்ட 13 மாவட்ட தலை நகரங்களில் உள்ள  சீமை கருவேல மரங்களை வேரோடு அகற்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதிமுக பொது செயலாளர் வைகோ மற்றும்  முன்னாள் மேயர் பட்டுராஜ்  ஆகியோர் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்ற கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் சீமை கருவேல மரங்களை 20நாட்களுக்குள் அகற்ற வேண்டும் எனவும் நீர் நிலைகள் மற்றும் தனியார் நிலங்களில் உள்ள கருவேல மரங்களையும் வேரோடு வெட்ட வேண்டும் எனவும் கருவேல மரங்களை அகற்றியது தொடர்பாக  ஜனவரி 11ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...