News
Loading...

மும்முறை தலாக் சட்டவிரோதமானது: அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு

மும்முறை தலாக் சட்டவிரோதமானது: அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு

மும்முறை தலாக் சட்டவிரோதமானது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

மூன்று முறை தலாக் கூறி பெண்களை விவகாரத்து செய்யும் நடைமுறையை இஸ்லாமியர்கள் கடைபிடித்து வருகின்றனர். இதனை இஸ்லாம் தனி சட்ட வாரியம் ஏற்கிறது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இஸ்லாமிய பெண்கள் சிலரும், தன்னார்வ அமைப்புகளும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.

இதுதொடர்பான வழக்கு ஒன்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதி சுனீத் குமார் விசாரித்தார். இதில் மும்முறை தலாக் என்பது இஸ்லாமிய பெண்களின் உரிமையை பறிக்கும் செயல் என்று கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இது அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயல் என்றும் கூறியுள்ளது.

இந்திய அரசியல் சாசனத்தை விடவும், தனி நபர் சட்ட வாரியம் உயர்ந்தது இல்லை என்றும் அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பிற்கு மரியாதை அளிப்பதாக அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது. இருப்பினும் எந்த ஒரு தீர்ப்பையும் எதிர்த்து, மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

English Summary : Triple talaq unconstitutional it violates rights of muslim women says allahabad hc

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...