News
Loading...

அரசு பள்ளியில், மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

அரசு பள்ளியில், மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே, அரசு பள்ளியில் 9-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மு.கோட்டூர் கிராமத்தில் இயங்கிவரும் அரசு உயர்நிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் சக்கன் என்பவர், அப்பள்ளியில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு, கடந்த 2 மாதங்களாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதை வெளியில் சொல்லக்கூடாது எனவும், தலைமை ஆசிரியர் மாணவியை மிரட்டியுள்ளார். இதனால், தன் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருந்த அந்த மாணவி, நேற்று தன் பெற்றோரிடம் இதுகுறித்து கூறியுள்ளார். இதையடுத்து, மாணவியின் பெற்றோர், மாவட்ட ஆட்சியர் ரவிக்குமாரிடம், தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர் சீனிராஜ் தலைமையில், அதிகாரிகள் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். மாணவியிடமும் மாணவியின் பொற்றோரிடமும் மேற்கொண்ட விசாரணையில், தலைமை ஆசிரியர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உண்மை என தெரியவந்தது. இதையடுத்து, தலைமை ஆசிரியர் சக்கனை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் உத்தரவிட்டார். விசாரணையில், தலைமை ஆசிரியர் சக்கன் முன்னர் பணிபுரிந்த பள்ளிகளிலும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளானது தெரியவந்தது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...