News
Loading...

அடிப்படையே தெரியாத அமைச்சர்கள்..!

அடிப்படையே தெரியாத அமைச்சர்கள்..!

சென்னையில் நேற்று நடந்த அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டத்தில், ஜெயலலிதா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தது உள்ளிட்ட 14 தீர்மானங்களை நிறைவேற்றினர்.

அவ்வாறு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், ஜெயலலிதாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கணும், அவரின் பிறந்தநாளை தேசிய விவசாயிகள் தினமாக அறிவிக்க வேண்டும், பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டவைகள் பொதுக்குழுவில் வலியுறுத்தப்பட்டன.

இதில் உண்மை என்னவென்றால்…

  • மறைந்த ஒருவருக்கு ‘நோபல் பரிசு’ கொடுக்கப்படமாட்டாது. அதற்கான விதி நோபல் பரிசு கமிட்டியின் விதியில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

  • ‘தேசிய விவசாயிகள் தினம்’ மறைந்த பிரதமர் சரண்சிங் அவர்களின் நினைவாக ஏற்கனவே கொண்டாப்பட்டு வருகிறது.

  • ‘பாரதரத்னா விருது’ ஊழல் வழக்குகளில் தண்டனைப் பெற்று சிறை தண்டனை பெற்றவர்களுக்கு கொடுப்பது மரபு அல்ல. அதுவும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது 15க்கும் மேற்பட்ட ஊழல் வழக்குகள் இருப்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால், இதுப்போன்ற அடிப்படைத் தகவல்கூட தெரியாமல்தான் முதலைமைச்சர், 30க்கும் மேற்பட்ட அமைச்சர்கள், 133 எம்எல்ஏக்கள், 54 எம்பிக்கள், சபாநாயகர் என வரிசைக்கட்டி நிற்பது கேலிகூத்தானது. இவர்கள் எப்படி இனி அதிமுகவை வழிநடத்தி செல்வார்கள்.? என்று நெட்டீசன்கள் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்