News
Loading...

வைகோ மேட்டர்! ஸ்டாலின் ஸட்ரிக்ட் அறிக்கை!

வைகோ மேட்டர்! ஸ்டாலின் ஸட்ரிக்ட் அறிக்கை!

வைகோவிடம் தி.மு.க.தொண்டர்கள் நடந்து கொண்ட விதம் கண்டிக்கத்தக்கது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவரது அறிக்கை, தலைவர் கலைஞர் அவர்களின் உடல் நலம் விசாரிக்க வந்த மதிமுக பொது செயலாளர் திரு. வைகோ அவர்களை தடுத்து நிறுத்தியதை நான் கண்டிக்கிறேன்.

மருத்துவமனையில் நான் இல்லாத நேரத்தில் வைகோ அவர்களுக்கு நேர்ந்த இந்த விரும்பத்தகாத சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். திமுகவிற்கு எதிரான பிரச்சாரங்களில் யார் ஈடுபட்டு வந்ததாலும் கழக தோழர்கள் அவர்களுக்கு எதிராக இது போன்ற செயல்களில் ஈடுபடுவது தலைவர் கலைஞர் அவர்களுக்கோ, எனக்கோ எக்காலத்திலும் உடன்பாடானது அல்ல.

கழகத்திற்கு எதிரான பிரச்சாரங்களை அரசியல் ரீதியாக ஜனநாயக முறையில் எதிர்கொள்ளும் சக்தி மிக்க தொண்டர்கள் நிறைந்த இந்த இயக்கத்தில் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை கழக தோழர்கள் தவிர்த்து அமைதி காக்குமாறு கண்டிப்புடன் கேட்டு கொள்கிறேன் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...