News
Loading...

புயலில் சிக்கி பலியானவர்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்!! தமிழக அரசு அறிவிப்பு!!

புயலில் சிக்கி பலியானவர்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்!!…தமிழக அரசு அறிவிப்பு!!..

ர்தா புயல் தக்கியதில் உயிரிழந்த 10 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று கரையை கடந்த வர்தா புயலால் சென்னை மாநகரம் பெரும் சேதத்தை சந்தித்தது.

மணிக்கு 120 கி.மீ அளவில் காற்று வீசியதால் சென்னை முழுவதும் நூற்றுக்கணக்கான மரங்கள் வேறோடு சாய்ந்தன. இதனால் பல லட்சம் மதிப்புள்ள கார்கள் சேதமடைந்தன.

கடலோர பகுதிகளில் மழை நீர் சூழ்ந்ததால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். பேரிடர் மீட்பு படையினர் சுமார் 8000 பேரை மீட்டு தற்காலிக முகாம்களில் சேர்த்தனர்.

இந்த புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...