News
Loading...

சென்னை அருகே கரையை கடக்க தொடங்கியது வர்தா புயல்

சென்னை அருகே கரையை கடக்க தொடங்கியது 'வர்தா' புயல்

ங்க கடலில் உருவாகியுள்ள வர்தா புயல் சென்னை அருகே கரையை கடக்க தொடங்கியது.

வங்க கடலில் கடந்த 7-ந்தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறியது. பின்னர் அது புயலாகவும் உருவானது. ‘வர்தா’ என்று பெயரிடப்பட்ட இந்த புயல் மேலும் வலுப்பெற்று அதிதீவிர புயலாக மாறியது.

இந்நிலையில் வர்தா புயல் வடக்கு தமிழகம் - தெற்கு ஆந்திரா இடையே, சென்னை அருகே கரையை கடக்க தொடங்கியுள்ளது. முழுமையாக புயல் கரையை கடக்க 3 மணி நேரம் ஆகும் என தெரிகிறது. புயல் கரையை கடந்த பின்பும் 12 மணி நேரம் வரை மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. தொடர்ந்து வீசும் காற்றால், ஆங்காங்கே சாலைகளில் மரங்கள் முறிந்து விழுகின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மழை தொடர்ந்து வருவதால், ஏரிகள் நிரம்பி வருகின்றன. பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகம் இருக்கும் என்பதால், அவற்றை தொடர்ந்து கண்காணித்து வரும் படி மத்திய நீர்வளத்துறை மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்