News
Loading...

ஜனவரி 12-ம் தேதி வெளியாகிறது பைரவா

ஜனவரி 12-ம் தேதி வெளியாகிறது 'பைரவா'

விஜய் நடிப்பில் தயாராகி வரும் 'பைரவா', ஜனவரி 12-ம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

பரதன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பைரவா'. கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இப்படத்துக்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

விஜயா வாஹினி நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தை ஸ்ரீக்ரீன் நிறுவனம் வெளியிட இருக்கிறது. தற்போது இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து, இறுதிக்கட்டப் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.

தற்போது, டிசம்பர் 20-ம் தேதி இப்படத்தின் இசை வெளியீடும், ஜனவரி 12-ம் தேதி பட வெளியீடும் இருக்கும் என ஸ்ரீக்ரீன் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.

'பைரவா' படப்பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது வெளிநாட்டில் ஓய்வெடுத்து வருகிறார் விஜய். சென்னை திரும்பியவுடன், அட்லீ இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்த திட்டமிட்டு இருக்கிறார் விஜய்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்