News
Loading...

விஜய் - விஷால் இருவருக்கும் என்னதான் பிரச்னை?

விஜய் - விஷால் இருவருக்கும் என்னதான் பிரச்னை?

விஜய்க்கும் விஷாலுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம். ‘இளைய தளபதி’ என்ற பட்டம் விஜய்க்கு. ‘புரட்சித் தளபதி’ என்ற பட்டம் விஷாலுக்கு. விஜய் தனது படத்துக்கு ‘புலி’ என்று பெயர் சூட்டினார். உடனே, தன் படத்துக்கு ‘பாயும் புலி’ என்று பெயர் வைத்தார் விஷால். அடுத்து, ‘புலி’ பட ஆடியோ விழா நடந்த அன்றைக்கே ‘பாயும் புலி’ ஃபங்ஷனையும் நடத்தினார். இப்போது, டிசம்பரில் ரிலீஸாக இருந்த ‘கத்தி சண்டை’ படத்தை, பொங்கலுக்கு ரிலீஸாகும் ‘பைரவா’ படத்துக்குப் போட்டியாக வெளியிட உள்ளார். விஜய்யின்  ரசிகர் மன்றத் தலைவராக இருந்த ஜெயசீலன், விஷால் ரசிகர் மன்றத் தலைவராக இருப்பதுதான் இதற்கெல்லாம் காரணம் எனச் சொல்லப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...