News
Loading...

ஜெயலலிதா மரணம் பற்றி தெளிவுப்படுத்த வேண்டும்..! விஜயகாந்த் அறிக்கை..!

ஜெயலலிதா மரணம் பற்றி தெளிவுப்படுத்த வேண்டும்..! விஜயகாந்த் அறிக்கை..!

மிழக முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் பற்றி தெளிவுப்படுத்த வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் திடீர் மரணம் பொதுமக்களிடையே பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி உயர் நீதிமன்ற நீதிபதியும் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா இறப்பதற்கு 2 நாட்களுக்கு முன் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை தெரிவித்திருந்தது.

இந்நிலையில் டிசம்பர் 5ம் தேதி திடீரென்று இறந்து விட்டார் என்று சொல்வது மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி தமிழக அரசு, மற்றும் மத்திய அரசு பொதுமக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...