News
Loading...

ஜெ.,வின் 10,500 பட்டு புடவைகள், தங்க நகைகள்!!… சேர போவது யாருக்கு ?…

ஜெ.,வின் 10,500 பட்டு புடவைகள், தங்க நகைகள்!!… சேர போவது யாருக்கு ?…

சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 10,500 பட்டு புடவைகளும், இதர பொருட்களும் இனி என்ன ஆகும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த 1991 முதல் 1996-ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சிக்காலத்தில் அப்போது முதல்வராக பதவி வகித்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.

இது தொடர்பான வழக்கில் அவரது வீட்டில் இருந்து 10,500 பட்டு புடவைகள், 91 கைக் கடிகாரங்கள், 800 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் 750 ஜோடி செருப்புகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

கடந்த ஆண்டு இந்த சொத்து குவிப்பு வழக்கிலிருந்து நீதிபதி குமரப்பா ஜெயலலிதாவை விடுதலை செய்யதார். இந்த விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட ஜெயலலிதா மரணமடைந்துவிட்டார்.

எனவே ஒருவேளை இந்த சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இவரையும், மற்றவர்களையும் உச்சநீதிமன்றம் விடுதலை செய்தால் ,ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் யாரிடம் சென்று சேரும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த பொருட்கள் அனைத்தும் பத்து கோடி ரூபாய் வரை மதிப்புள்ளவை என்பதால் இவற்றை யார் உரிமை கொண்டாடப் போகிறார்கள் என்பது பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...