News
Loading...

அஜித்தின் தல 57 படத்தை வாங்கிய சசிகலா குரூப்ஸ்..!

அஜித்தின் தல 57 படத்தை வாங்கிய சசிகலா குரூப்ஸ்..!

ஜித் தற்போது தன் 57 வ து படத்தில் பயங்கர பிசியாக இருக்கிறார். ஆனாலும், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது உள்ள பிரியத்தின் காரணமாக பல்கேரியாவில் ஷூட்டிங்கில் இருந்து உடனடியாக சென்னை திரும்பினார். ஆனாலும், அவரால் இறுதி அஞ்சலியில் கலந்துக்கொள்ள முடியவில்லை. அடக்கம் செய்யப்பட்ட மெரினா கடற்கரைக்கு சென்று தன் அஞ்சலியை செலுத்தினார்.

இதன் பின் மீண்டும் பல்கேரியாவிற்கு படப்பிடிப்புக்காக விரைந்த அஜித், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு வீடு திரும்பினார். இந்த சூழலில் அவர் போயஸ் தோட்டம் சென்று சசிகலாவை சந்தித்தார் என்ற செய்தி பரவியது. ஆனால், அது உண்மை இல்லை என்று அஜித் தரப்பால் தெளிவு படுத்தப்பட்டது.

உண்மையில் என்ன என்று பார்த்தால்…அஜித்தின் தல 57 படத்தை ஜாஸ் சினிமாஸ் வாங்கியுள்ளதாம். இந்த ஜாஸ் சினிமாஸ் சசிகலாவின் அண்ணன் மகன் நிறுவனம் .

இதனால் தான் என்னவோ…அஜித் சசிகலாவை சந்தித்தார் என்ற தகவல் பரவி இருக்கலாம் என்று இப்போது சொல்லப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்