News
Loading...

ஜெயலலிதா மருத்துவமனையில்..! இசட் பிளஸ் பாதுகாப்பு எங்கே..? வலுக்கும் சந்தேகம்..!

ஜெயலலிதா மருத்துவமனையில்..! இசட் பிளஸ் பாதுகாப்பு எங்கே..? வலுக்கும் சந்தேகம்..!

மிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா என்.எஸ்.ஜி படையின் பாதுகாப்பில் உள்ளவர். அவருக்கு 24 மணி நேரமும் என்.எஸ்.ஜி பாதுகாப்பு வழங்கப்பட்டு வரும். அவர் வீட்டை விட்டு வெளியேறி அலுவலகத்துக்கு சென்று மீண்டும் அவர் பத்திரமாக வீட்டுக்கு அழைத்து சென்று விடுவது என்.எஸ்.ஜியின் பணியாகும்.

இந்தியாவிலேயே மொத்தம் 16 வி.வி.ஐ.பி-க்களுக்கு மட்டுமே, என்எஸ்ஜி படையினரின் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியும் இசட் பிளஸ் பாதுகாப்புக்கு உரியவர்கள்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின், தற்போது கருணாநிதிக்கு மட்டுமே இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. கைகளில் எந்திரத் துப்பாக்கியும், ஊடுருவிப் பார்க்கும் கூர்மையான கண்களும், வி.வி.ஐ.பி-க்களின் பாதுகாப்பும் மட்டுமே இவர்களின் சொத்து. வி.வி.ஐ.பி-க்களின் பாதுகாப்பு மட்டுமே இவர்கள் இலக்காக கொண்டு செயல்படுவர்.

இந்த கருப்புப்பூனைப் படையினர் அனைவரும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள். அதுபோல் ஒரு வி.வி.ஜ.பி வீட்டில் இருந்து புறப்படுவதற்கு 15 நிமிடங்கள் முன்னரே இவர்கள் தயாராக இருப்பார்கள்.

அதுவரை மாநில பாதுகாப்புப் படை வசம் உள்ள வி.வி.ஐ.பியின் பாதுகாப்பு என்.எஸ்.ஜியிடம் ஒப்படைக்கப்படும். மீண்டும் வீட்டிற்கு வந்த பிறகு உள்ளூர் பாதுகாப்பு மற்றும் மெய்க்காவலர்களிடம் வி.வி.ஜ.பியை ஒப்படைத்து விட்டு எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் பெற்ற பிறகே, என்.எஸ்.ஜி அங்கிருந்து புறப்படும்.

தங்கள் பாதுகாப்பில் உள்ள வி.வி.ஐ.பிக்களின் நகர்வுகள் பற்றியும் அவர்களின் உடல்நிலை உட்பட அனைத்து விவரங்களையும் தினமும் காலை ஆறு மணி மற்றும் மாலை ஆறு மணிக்கும் தங்களின் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்பது இவர்களின் கடமையாகும்.

என்.எஸ்.ஜி பாதுகாப்பில் உள்ள எந்த வி.வி.ஐ.பியும் அவர்களுக்குத் தெரியாமல் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. ஒருவேளை மிகமிக அவசரமாக செல்லவேண்டி இருந்தாலும்கூட அவர் வெளியே புறப்பட்டு விட்டார் என்ற தகவலும் எங்கே போகிறார் என்ற தகவலும் உடனடியாக என்.எஸ்.ஜிக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

அவ்வாறு சென்றுவிட்டால் அவர்கள் அந்த இடத்திற்குச் செல்வதுற்குள் என்.எஸ்.ஜி. படை அங்கே சென்று பாதுகாப்பை டேக் ஓவர் செய்து கொள்ளும்.

இந்நிலையில் அவர்களுக்கு உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அந்த வி.வி.ஐ.பி அனுமதிக்கப்பட்டால், என்.எஸ்.ஜி குழுவின் உதவி ஆணையர், வி.வி.ஐ.பியைப் பார்த்து தங்கள் தலைமை வாயிலாக, உள்துறை அமைச்சகத்திற்கு காலை மற்றும் மாலை ஆறு மணிக்கு வி.வி.ஐ.பியின் உடல் நிலை குறித்து அறிக்கை அனுப்ப வேண்டும்.

வலுக்கும் சந்தேகங்கள்:

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது அது பற்றி என்.எஸ்.ஜி படையினருக்கு தகவல் சொல்லப்பட்டதா. அவ்வாறு தகவல் சொல்லியிருந்தால் மருத்துவமனைக்கு உடனடியாக என்.எஸ்.ஜி படையினர் சென்றார்களா?

மருத்துவமனைக்கு என்.எஸ்.ஜி சென்றிருந்தால் அந்தப்படையின் உயர் அதிகாரி ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கப்பட்டாரா? அதுபோல் பார்த்திருந்தால் என்.எஸ்.ஜி படை உயர் அதிகாரி, உள்துறை அமைச்சகத்திற்கு என்ன அறிக்கை அனுப்பினார்.

ஜெயலலிதா 75 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாள் தவிர, தினசரி அனுப்பிய அறிக்கை என்ன?

இந்த சந்தேகத்தால் முன்னாள் முதல்வரின் ஜெயலலிதாவின் மரணம் விடை தெரியாத மர்மமாகவே உள்ளது. இது பற்றி உள்துறை அமைச்சகம் தான் விளக்கம் தெரிவிக்க வேண்டும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்