News
Loading...

நியூயார்க்கில் மிதந்த மீன்கள்!

நியூயார்க்கில் மிதந்த மீன்கள்!

நியூயார்க்கின் சௌதாம்ப்டன் நகர்வாசி ஒருவர், காலையில் எழுந்து ஷின்னேகாக் கால்வாயை பார்த்தபோது, நீர் முழுக்க வெள்ளி போல ஜொலிக்க, அருகில் சென்று பார்த்தபோது அதிர்ந்துபோனார். மினுமினுப்பான பன்கர் மீன்கள் கால்வாய் முழுக்க குவியலாய் செத்து மிதந்தால் யாருக்கும் பதட்டமாகுமே! திடீரென அத்தனை மீன்களும் இறந்துபோனதன் காரணம் என்ன?  

நியூயார்க்கின் கிழக்கில் உள்ள சௌதாம்ப்டன் நகரின் ஷின்னேகாக் கால்வாய்தான் சம்பவம் நிகழ்ந்த இடம். நீரில் வாழ்ந்த பன்கர் மீன்கள் ஒரே நாளில் குவியலாய் இறந்து மிதக்க, நகரமே பீதியாகிவிட்டது. பெரிய மீன்களால் துரத்தப்பட்டு கால்வாயில் வந்த மீன்கள் கால்வாய் மூடப்பட்டு விட்டதால், சுவாசிக்க ஆக்சிஜனின்றி இறந்துபோயிருக்கலாம் என்று லாஜிக்காக பேசுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.  
  
‘‘முதலில் இறந்துபோனவை சில மீன்கள்தான் என்று நினைத்தேன். பிறகுதான் ஆயிரக் கணக்கிலான மீன்கள் இறந்தது தெரிய வந்தது’’ என பதட்டமாக பேசுகிறார் நீர்வள ஆலோசகர் டாம் ஜோன்ஸ். 

சிறிய ட்ரோன் விமானத்தினால், இறந்துபோன மீன்களை வீடியோவாக எடுத்து சமூகவலைத் தளங்களில் பதிவிட்டு உலகையே எழுப்பியது சார்தான். இறந்துபோன மீன்கள் அழுகிய நாற்றம் ஏற்படுத்தாத தன் காரணம், குளிர்ந்த நீராக இருக்கலாம் என்று யூக காரணம் சொல்கிறார் டாம் ஜோன்ஸ். 

இறந்துபோன மீன்கள் மென்ஹாடன், மொஸ்பன்கர் என்று அழைக்கப்படுகின்றன. 38 செ.மீ நீளம் வளரும் இவை Clupeidae குடும்பத்தைச் சேர்ந்தவை. இதில் Brevoortia, Ethmidium எனும் இருவகைகள் உண்டு.

பெரும்பாலும் பெரிய மீன்களுக்கான மெயின்டிஷ் பன்கர் மீன்தான். உலகம் முழுவதும் இந்த மீன்கள் துணை உணவுகளாக மீன் ஆயில், மாத்திரைகளில் மற்றும் அழகு சாதனப்பொருளான லிப்ஸ்டிக்கில் மூலப்பொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றன.   

அட்லாண்டிக் கடலோடு இணைந்துள்ள ஷின்னேகாக் கால்வாய் பாலம், அதிகாலை 3 மணிக்கு வழக்கமாக மூடப்படும். அந்த சமயத்தில் கால்வாயினுள் வந்த மீன்கள் போதிய அளவு ஆக்சிஜன் நீரில் கிடைக்காமல் இறந்திருக்கலாம்.  காலை 10 மணிக்கு பாலம் திறக்கப்பட்டபோது, மீன்கள் இறந்துபோய் கால்வாய் நீரில் மிதப்பது எங்களுக்குத் தெரியும். 

உடனே அவற்றினை அகற்றிவிட்டோம் என சுதாரிப்பு உத்தரவாதம் தருகிறது நியூயார்க்கின் சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறை. நமது கட்டுமானங்களை விட இயற்கை கட்டுமானம் சரியாமல் பார்த்துக்கொள்வது நம் வாழ்வு மேம்பட மிகவும்அவசியம்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...