News
Loading...

தஞ்சை அருகே பயிர்கள் கருகியதால் இளம் விவசாயி தற்கொலை..!

தஞ்சை அருகே பயிர்கள் கருகியதால் இளம் விவசாயி தற்கொலை..!

றட்சியால் பயிர்கள் கருகுவதை கண்டு வேதனை அடைந்த இளம் விவசாயி பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தஞ்சையில் நிகழ்ந்துள்ளது.

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே குழிமாத்தூர் கிராமம் குடியானத் தெருவை சேர்ந்த இளம் விவசாயி அரவிந்த். இவர், 13 ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி செய்திருந்தார். ஆனால் போதிய அளவில் நீர் இல்லாத காரணத்தினாலும், மழை பெய்யாததாலும் அவரின் 10 ஏக்கர் வயல் வறட்சியால் சாய்ந்துள்ளது. இதனால் ஏற்பட்ட மனவேதனையால் அரவிந்த் கடந்த ஓரிரு நாட்களாகவே முகம் வாடி காணப்பட்டுள்ளார். பயிர் கருகிய சோகம் தாங்க முடியாமல் வயலுக்காக வாங்கி வைத்திருந்த பூச்சிமருந்தை குடித்து அரவிந்த் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. உடனடியாக அவரை மீட்ட உறவினர்கள், தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் சிசிச்சை பலனின்றி அரவிந்த் பரிதாபமாக உயிரிழந்தார்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் வறட்சியால் விவசாயிகள் உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது. விவசாயிகள் தற்கொலையை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...