News
Loading...

149 ரூபாய்க்கு இலவச டேட்டா மற்றும் வாய்ஸ் கால்ஸ்: பிஎஸ்என்எல் அதிரடி

149 ரூபாய்க்கு இலவச டேட்டா மற்றும் வாய்ஸ் கால்ஸ்: பிஎஸ்என்எல் அதிரடி

பிஎஸ்என்எல் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கென அந்நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதன் படி ரூ.149 ரீசார்ஜ் செய்து வாடிக்கையாளர்கள் தினமும் முப்பது நிமிடங்களுக்கு வாய்ஸ் கால் மற்றும் 300 எம்பி டேட்டா பயன்படுத்த முடியும். இதில் அனைத்து நெட்வொர்க்களுக்கும் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை மேற்கொள்ள முடியும். 

இதே போன்று ரூ.439 ரீசார்ஜ் செய்யும் போது மூன்று மாதங்களுக்கு இலவச டேட்டா மற்றும் வாய்ஸ் கால்ஸ் வழங்கப்படுகின்றது. 

பிஎஸ்என்எல் ரூ.149 மற்றும் ரூ.439 திட்டங்களில் இலவச அழைப்புகளுடன் 300 எம்பி மொபைல் டேட்டாவும் வழங்கப்படுகின்றது. இலவச அழைப்புகளை தினமும் முப்பது நிமிடங்களுக்கு மேற்கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

பிஎஸ்என்எல் புதிய சலுகைகள் புதிய வாடிக்கையாளர்களுக்கும், வேறு நெட்வொர்க் பயன்படுத்தி புதிதாக பிஎஸ்என்எல் நெட்வொர்க்கிற்கு போர்ட் செய்வோருக்கும் வழங்கப்படுகின்றது. இந்த சலுகையினை வாடிக்கையாளர்கள் அனைத்து சில்லறை விநியோகஸ்தர்கள், வாடிக்கையாளர் சேவை மையங்களிலும் ஆக்டிவேட் செய்து கொள்ள முடியும் என பிஎஸ்என்எல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த சலுகைகளுடன் ரூ.26 விலையில் புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில் வாடிக்கையாளர்களுக்கு இலவச உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை அனைத்து நெட்வொர்க்களுக்கும் மேற்கொள்ள முடியும். இதற்கான வேலிடிட்டி 26 மணி நேரம் ஆகும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்