News
Loading...

வங்காளதேசத்தில் டாக்டர்கள் கைகளால் மருந்து சீட்டு எழுத தடை

வங்காளதேசத்தில் டாக்டர்கள் கைகளால் மருந்து சீட்டு எழுத தடை

ல டாக்டர்கள் எழுதி கொடுக்கும் மருந்து சீட்டில் என்ன இருக்கிறது என்றே புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு எழுத்துகள் கிறுக்கலாக இருக்கும்.

இதை மருந்து கடையில் இருக்கும் ஊழியர்கள் கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இருப்பதுண்டு. இதனால் மருந்துகளை மாற்றி கொடுத்து பிரச்சனைகள் ஏற்படுவதும் அடிக்கடி நடக்கிறது.

இதே போன்ற நிலைமை தான் வங்காளதேசத்திலும் உள்ளது. இதை எதிர்த்து ஒருவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதி, இனி டாக்டர்கள் மருந்து சீட்டுகளில் தங்கள் கைகளால் எழுதக்கூடாது. மருந்து விவரங்களை டைப் அடித்து கொடுக்க வேண்டும்.

அதையும் மீறி எழுத வேண்டிய கட்டாயம் இருந்தால் மருந்து விவரங்களை ஆங்கிலத்தில் பெரிய எழுத்துகளாக எழுத வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் சுகாதாரதுறையினர் இதை கண்காணித்து 3 மாதத்துக்குள் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறி உள்ளார். 

இந்தியாவிலும் இது போன்று கொண்டுவந்தால் நன்றாக இருக்கும்...

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்