News
Loading...

ஆந்திராவில் நாளை கோர்ட்டு தடையை மீறி சேவல் சண்டை

ஆந்திராவில் நாளை கோர்ட்டு தடையை மீறி சேவல் சண்டை

பொங்கல் பண்டிகையையொட்டி ஆந்திராவில் சேவல் பந்தயம் நடத்தப்படுவது வழக்கம். இதில் சேவல்கள் காயம் அடைகிறது என்று கூறி பந்தயத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்று ஐதராபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இதை விசாரித்த ஐகோர்ட்டு, சேவல் பந்தயம் நடத்த தடை விதித்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, பந்தயத்தின் போது சேவல் கால்களில் கட்டப்படும் கத்திகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் சேவல்களை பறிமுதல் செய்யக்கூடாது என்றும் கூறி வழக்கை 4 வாரத்துக்கு தள்ளி வைத்தது.

சேவல் பந்தயத்தின் மீதான தடையை அகற்ற மறுத்துவிட்டது. இதனால் சேவல் பந்தயம் நடத்த தடை நீடிக்கிறது.

ஆனால் கோர்ட்டு தடை உத்தரவையும் மீறி ஆந்திராவில் சேவல் பந்தயம் நடத்த தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இப்போட்டி நாளை முதல் தொடங்குகிறது.

இதற்காக குண்டூரில் 6 மைதானங்கள் தயாராகி வருகிறது. போட்டிக்கான சேவல்களுடன் அதன் உரிமையாளர்கள் குண்டூரில் குவிந்து வருகிறார்கள்.

சேவல் சண்டை பந்தயத்தில் ஆளும் கட்சியான தெலுங்கு தேசத்தின் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொள்கிறார்கள்.

ஆனால் சேவல் பந்தயத்தை நடத்த அனுமதிக்கலாமா? வேண்டாமா? என்ற குழப்பத்துடன் போலீசார் உள்ளனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...