News
Loading...

கேலி செய்ததை தட்டி கேட்டதால் 10-ம் வகுப்பு மாணவியை தீ வைத்து எரித்த கொடூரம்

கேலி செய்ததை தட்டி கேட்டதால் 10-ம் வகுப்பு மாணவியை தீ வைத்து எரித்த கொடூரம்

டிசா மாநிலம் ஹலகண்டி மாவட்டத்தில் உள்ள பவானிபாட்னா நகர் அருகில் மதுப்பூர் கன்யா ஆஸ்ரமம் உள்ளது. அந்த ஆஸ்ரம பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த ஒரு மாணவி சமீபத்தில் ஊருக்கு சற்றுத்தள்ளி உள்ள குளத்துக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந் தாள். 

அவளை அதே ஊரைச் சேர்ந்த தாஸ் என்பவன் தன் நண்பனுடன் சேர்ந்து ஈவ்-டீசிங் செய்தான். இதற்கு அந்த மாணவி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த தாசும் அவரது நண்பரும் அந்த மாணவியை கடுமையாக திட்டினார்கள். இது பற்றி அந்த மாணவி வீடு திரும்பியதும் தனது பெற்றோரிடம் தெரிவித்தார். 

உடனே இரு வாலிபர்களையும் அந்த மாணவியின் பெற்றோர் கண்டித்தனர். இதனால் அந்த மாணவி மீது இரு வாலிபர்களுக்கும் ஆத்திரம் ஏற்பட்டது. நேற்று தாசும் அவனது நண்பரும் அந்த மாணவி வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டனர். உடனே அந்த மாணவியின் தாயார் வெளியில் சென்று தன் கணவரை அழைக்க சென்றார். 

வீட்டில் அந்த மாணவி மட்டும் தனியாக இருந்தார். இதை அறிந்த 2 வாலிபர்களும் வீட்டுக்குள் புகுந்து மாணவி மீது மண்எண்ணையை ஊற்றி தீவைத்தனர்.  இதில் மாணவி உடல் கருகியது. அலறி துடித்த அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். 

மாணவி உடலில் 90 சதவீதம் தீ காயம் ஏற்பட்டுள்ளது. அவரிடம் மாஜிஸ்திரேட் வாக்குமூலம் பெற்றார். இதையடுத்து மாணவியை தீ வைத்து எரித்த 2 வாலிபர்களும் கைது செய்யப்பட்டனர். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...