News
Loading...

இன்று ஒ.பி.எஸ். பிறந்த நாள்! இப்படி ஒரு முதலமைச்சரை நீங்கள் பார்த்தது உண்டா?

இன்று ஒ.பி.எஸ். பிறந்த நாள்! இப்படி ஒரு முதலமைச்சரை நீங்கள் பார்த்தது உண்டா?

மிழ்நாட்டில் முதலமைச்சருக்கு பிறந்த நாள் என்றால் மாநிலத்தையே அல்லோலகல்லோ படுத்தி விடுவார்கள் திராவிட கட்சிகளின் தொண்டர்கள்.

ஜெயலலிதாவிற்கு பிறந்த நாள் என்றால், பேனர்கள், போஸ்டர்கள், பட்டாசுகள், இனிப்புகள் என அமர்களப்படுத்தி விடுவார்கள்.

கருணாநிதிக்கு பிறந்த நாள் என்றாலும் அப்படித் தான். ஒரு மாதமாக அதனை திமுகவினர் கொண்டாடுவார்கள். ஆதரவற்றோர் இல்லங்களில் விருந்துகள் பல நாட்கள் தொடர்ந்து வழங்கப்படும்.

ஆனால் முதன்முறையாக தமிழகத்தின் முதலமைச்சர் பிறந்த நாள் விழா எந்த அமர்களமும் இன்றி அவரது குடும்பத்தினரால் மட்டும் கொண்டாடப்படுகிறது.

பொங்கல் மற்றும் பிறந்தநாளை கொண்டாட ஓ.பன்னீர் செல்வம் நேற்று சொந்த ஊரான பெரிய குளம் சென்றார்.

இன்று மாலையே சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது. மக்கள் இதுபோன்ற எளிமையான முதலமைச்சர்களையே விரும்புகின்றனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...