News
Loading...

பீட்டாவை குறிவைப்பது மலிவானது, பயனற்றது : ஸ்டாலினுக்கு பீட்டா கண்டனம்

பீட்டாவை குறிவைப்பது மலிவானது, பயனற்றது : ஸ்டாலினுக்கு பீட்டா கண்டனம்

மிழகத்தின் பண்பாட்டு அடையாளத்தைப் பாதுகாக்கத் தவறியதால் ஏற்பட்டிருக்கும் பாதகமான விளைவுகளை எண்ணிப் பார்த்து, மத்திய அரசு தனக்கு கீழ் இயங்கும் விலங்குகள் நல வாரியத்தின் தற்போதைய அமைப்பைக் கலைத்துவிட்டு, புதியமுறையில் அதனை அமைத்து, அதில் தமிழகத்திற்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் உருவாக்க வேண்டும் என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

தொண்டு நிறுவனம் என்ற பெயரில், நமது கலாச்சாரத்திற்கு எதிராகவும் தேசவிரோத சக்தியாகவும் செயல்படும் வெளிநாட்டு என்.ஜி.ஒ நிறுவனமான பீட்டா அமைப்புக்கு மத்திய அரசு உடனடியாகத் தடைவிதிக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் திட்டவட்டமாக கூறியிருந்தார்.

இதற்கு பீட்டா இந்தியா அமைப்பின் விலங்குகள் விவகாரங்கள் பிரிவின் இயக்குனர் மணிலால் பதில் அளித்துள்ளார். 

‘இந்திய அரசியலமைப்பு சட்டம் 51A(G)-ன்படி ஒவ்வொரு இந்திய குடிமகனும் விலங்குகள் மீது இரக்கம் காட்ட வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது. விலங்குகள் மீது கருணை காட்டுவது தேசப்பற்று. கொடுமைப்படுத்துபவர்கள் இந்தியர்கள் அல்ல. சட்டம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மதித்து பீட்டா இந்தியா விலங்குகளுக்கு சேவையாற்றுகிறது. 

சட்டத்திற்கு மதிப்பளித்து நடக்கும் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பை குறிவைப்பது மலிவானது, பயனற்றது. காளைகளை வதை செய்வதை தடுக்கும் மத்திய அரசின் சட்டங்களில் இது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது’ என மணிலால் கூறியுள்ளார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்