News
Loading...

அறப்போராட்டத்தை கலவரப்போராட்டமாக்கியது யார்? பதற வைக்கும் உண்மைகள் அம்பலம்

அறப்போராட்டத்தை கலவரப்போராட்டமாக்கியது யார்? பதற வைக்கும் உண்மைகள் அம்பலம்

லகமே வியந்து பார்க்கும் அளவிற்கு தமிழக இளைஞர்கள் மாணவர்கள் ஒரு அறவழிப்போராட்டத்தை வெற்றியாக செய்திருக்கிறார்கள்.

நேற்றுவரை அறவழியாகவும், அமைதியாகவும் நடந்துகொண்டிருந்த இந்தப் போராட்டம் இன்று தீடிரென காவல்த்துறையினரின் தடியடியோடு கலவரமாக்கப்பட்டுள்ளது.
இப்பொழுதுவரை சென்னை முழுவதும் ஒருவகையான பதற்ற சூழ்நிலை தான் நிலவிவருகின்றது.

எனினும் மெரீனாக் கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்கள் தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கின்றார்கள். நிரந்தரச் சட்டத்தைக் கொண்டுவரும் வரை தமது போராட்டம் ஓயப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறார்கள்.

ஆனால், அவர்களின் போராட்டத்தை முடித்து வைப்பதற்கு தமிழக காவல்த்துறை போராடிவருகின்றனர்.

அதிகாலையில் மெரீனாக் கடற்கரையில் குவிக்கப்பட்டிருந்த காவல்த்துறையினர் மாணவர்களை கலைந்து செல்லுமாறு அறிவித்திருந்தனர். ஆனால் மாணவர்கள் மறுத்ததைத் தொடர்ந்து அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டிருக்கிறது.

மாணவர்கள் பலர் காயமடைந்திருக்கிறார்கள். சிலர் காவல்த்துறையினரால் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் தான் திருவல்லிக்கேணியில் உள்ள காவல் நிலையத்துக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது பெற்றோல் ஊற்றி எரிக்கப்பட்டிருக்கிறது.

இதைத் தொடர்ந்து கலவரம் தொடங்கியது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறு பிரச்சினையை தெரிதாக்கினார்கள்.

மாணவர்கள், பொதுமக்கள் என மக்கள் அங்கும் இங்குமாக கூடினர். வீதி மறியலில் ஈடுபட்டனர். மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைக் கண்டித்து.
இந்நிலையில், இந்தப் போராட்டத்தில் உண்மையில் நடந்து கொண்டு இருப்பது என்ன? இது தொடர்பாக தமிழகத்தில் இருந்து பதற வைக்கும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

அறப்போராட்டத்தை கலவரப்போராட்டமாக்கியது யார்? பதற வைக்கும் உண்மைகள் அம்பலம்

அதாவது, கடந்த ஒருவாரமாக மெரீனாக் கடற்கரை உட்பட தமிழகம் எங்கும் அமைதியான போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

எங்கும் வன்முறையோ, அன்றி கலவரங்களோ இடம்பெறவில்லை. இது பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தியா முழுவதும் உள்ள தலைவர்கள் தமிழக இளைஞர்கள் குறித்து பாராட்டுக்களைத் தெரிவித்திருந்தனர்.

இன, மத, கட்சி பேதமின்றி மாணவர்கள், இளைஞர்கள் ஓரணியில் தன்னெழுச்சியாக அணி திரண்டனர்.

குறிப்பாக இஸ்லாமியர்கள் தாங்களும் இந்தப் போராட்டத்தில் பங்களிப்புச் செய்ததுடன், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களுக்கு உணவு, நீர் போன்ற அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தனர்.

ஆனால், இந்த நிகழ்வு குறிப்பிட்ட சிலருக்கு உருத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தில் இளைய தலைமுறையினர் இப்படி தன்னெழுச்சியாக ஒன்று சேர்ந்ததும், மதங்கள், சாதிகள், இனங்கள் என்று எந்த அடையாளத்தையும் காணாமல் பிரிந்து நிற்காமல் ஒரு வாரகாலத்திற்கு இப்படியே இருந்ததை இந்துத்துவ அமைப்பான ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புக்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

தமிழகத்தில் முன்னதாகவே பாரதிய ஜனதா கட்சியினால் ஆட்சியைப் பிடிக்கவோ தன்னை நிலை நிறுத்திக்கொள்ளவோ முடியவில்லை.

இந்நிலையில் நாளைய தலைமுறையினர் இப்படி சேர்ந்திருப்பது அவர்களை ஆத்திரமடையச் செய்திருக்கிறது. பயமுறுத்தியிருக்கிறது.
இந்நிலையில் அமைதியான போராட்டதை குழப்ப வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

தவிரவும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், மோடியையும், பாரதிய ஜனதாவை அதிகம் சாடியிருந்தனர். இது குறித்து மிக விரிவான அறிக்கை ஒன்றை மத்திய உளவுத்துறை மத்திய அரசாங்கத்திற்கு அளித்திருக்கிறது.

அதில், மத்திய அரசாங்கத்திற்கு இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்ப்பு உருவாகிக்கொண்டிருக்கிறது. இது நீடித்தால் அவ்வளவு நல்லதல்ல. என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டது உளவுத்துறை.

இதனால், தான் அவசரச் சட்டத்திற்கு மறுத்த மோடி பின்னர் இறங்கியும் வந்திருக்கிறார்.

இந்நிலையில் போராட்டக்காரர்களை தொடர்ந்தும் இப்படியே போராட அனுமதிப்பது நல்லதல்ல என்ற முடிவிற்கு வந்தனர்.

இதுவொருபுறமிருக்க, தமிழகத்தில் இத்தனை நாளும் நடந்த போராட்டத்திற்கு தமிழக காவல்த்துறையினர் ஆதரவு தெரிவித்து வருவதாகவும், அரசாங்கம் இதை அனுமதிப்பதாகவும் ஒரு தகவல் மத்திய அரசுக்கு போய்ச் சேர்ந்திருக்கிறது.

இந்நிலையில் தமிழக காவல்த்துறையினரை வைத்து இந்தப் போராட்டத்தை விரட்டவேண்டிய தேவையை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

இதனால், கலவரங்களை உண்டுபண்ணி அதை தமிழக இளைஞர்கள், மாணவர்கள் மீது பழிபோட்டுவிட்டு அடக்க முனைந்திருக்கிறார்கள் என்கிறார்கள் தகவல் அறிந்த தரப்பினர்.

இதுதான் நடந்திருக்கிறது. எனினும் இன்று வாகனங்கள் எரித்தது மாணவர்கள் இல்லை என்றும், அது வேறு ஒரு மர்மக்குழுவினர் தான் எரித்திருக்கிறார்கள் என்றும் காவல்த்துறையினர் அறிவித்திருக்கின்றார்கள்.

அது தொடர்பான சிசிடிவி ஒளிப்பதிவினை ஆராய்ந்துவருவதாக அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். இது சற்று ஆறுதல் கொடுத்தாலும்,

இப்பொழுது தமிழகத்தில் பதற்றமான சூழலே நிலவிவருகின்றது. இந்தியாவின் மற்ற மாநிலங்கள் நிகழும் போராட்டங்கள் கலவரமாகவும், பெரும் கொந்தழிப்பிலும் தான் முடியும்.

ஆனால், தமிழகத்தில் இம்முறை நடந்த இந்தப்போராட்டம் அமைதியாக நடந்திருப்பதை அவர்களால் ஜீரணிக்கமுடியவில்லை.

எப்படியேனும் குழப்பவேண்டும் என்று நினைத்தார்கள். இந்துத்துவவாதிகளைப் பொறுத்தவரை இந்தியாவில் சாதியக் கட்டமைப்பு உடையக்கூடாது. மதக்கட்டமைப்பு உடையக்கூடாது என்பதில் ஆளும் பாரதிய ஜனதாக் கட்சியும் இந்துத்துவ அமைப்புக்களும் குறியாக இருக்கின்றனர்.

தமிழகமும் அதற்கு விதிவிலக்காக இருக்க முடியாது என்பது அவர்களின் முடிவு. அதனால் இங்கே இப்படியான விசமத்தனமான வேலைகளைச் செய்கிறார்கள்.

இதனால் தான் இன்றுவரை அந்தக் கட்சியினரால் தமி்ழகத்தில் ஆட்சியைப் புடிக்கமுடியாமல் தவிர்த்துவருகின்றார்கள். பெரும்பாடுபட்டும் அவர்களால் வெற்றி பெறமுடியவில்லை. அந்தக்கோபமும் இருக்கத்தான் செய்யும்.

ஒரு உண்மையான அறவழிப்போராட்டத்தை திசை திருப்பும் செயலை என்னவென்று சொல்ல. அமைதியைப் போதித்த காந்திய தேசம் அமைதியான போராட்டத்தை ரணகளப்படுத்திக் கொண்டிருக்கிறது.

ஈழத்தில் தியாகி திலீபனின் காந்தீயப் போராட்டத்தைக் கூட மதிக்காதவர்கள் மாணவர்களின் இந்தப் போராட்டத்தையா மதித்து வழிவிடப்போகிறார்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்