News
Loading...

ஆற்று மணல் விற்பனையை அரசுடமை ஆக்கவேண்டும்: ராமதாஸ்

ஆற்று மணல் விற்பனையை அரசுடமை ஆக்கவேண்டும்: ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வயலுக்கு இறைக்கும் நீரில் ஒரு பகுதி விழலுக்கு பாய்ந்தால் கூட பரவாயில்லை... ஆனால், மொத்த நீரும் விழலுக்கே பாய்ந்தால் என்ன விளைவுகள் ஏற்படுமோ, அது தான் ஆற்று மணல் விற்பனையில் தமிழக அரசுக்கும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆற்று மணல் விற்பனையில் ஒப்பந்தக்காரர்களுக்கு ஆயிரமாயிரம் கோடிகள் குவியும் நிலையில் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.150 கோடி கூட கிடைக்கவில்லை.

மணல் விற்பனை மூலமாக அரசின் வருவாயை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகத் தான் கடந்த 2003-ம் ஆண்டில் தமிழகம் முழுவதும் உள்ள மணல் குவாரிகள் அரசுடைமையாக்கப்பட்டன. ஆனால், அரசின் வருவாய் மட்டும் அதிகரிக்கவில்லை.

2003-04-ம் ஆண்டில் ரூ.150 கோடியாக இருந்த மணல் வருமானம் 10 ஆண்டுகள் கழித்து 2013-14 -ம் ஆண்டில் ரூ.133.37 கோடியாக குறைந்து விட்டது. இடையில் சில ஆண்டுகள் மணல் விற்பனை மூலமான வருவாய் ரூ.200 கோடியை நெருங்கிய போதிலும், அரசுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய வருவாயில் நூற்றில் ஒரு பங்கு கூட அரசுக்கு கிடைக்கவில்லை.

ஆற்று மணல் விற்பனையை இன்று முதல் அரசுடைமை ஆக்கினால் கூட ஆண்டுக்கு ரூ.20,000 கோடி முதல் ரூ.25,000 கோடி வரை கூடுதல் வருமானம் கிடைக்கும். எனவே, மணல் வணிகத்தை உடனடியாக அரசுடமையாக்க வேண்டும். இல்லாவிட்டால் மணல் மூலம் மக்கள் நலனுக்கு செலவிடப்பட வேண்டிய வருவாயை சுரண்டிய ஆட்சியாளர்களை வாய்ப்பு கிடைக்கும் போது மக்கள் தண்டிப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் தினமும் ஒரு லட்சம் சரக்குந்துகளில் மணல் அள்ளப்படும் நிலையில், அதிலிருந்து அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாயை ஒப்பந்தக்காரர்களும், ஆட்சியாளர்களும் எப்படியெல்லாம் கொள்ளையடிக்கிறார்கள் என்பதை கடந்த 26-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் விளக்கியிருந்தேன். மணல் விற்பனையில் அரசுக்கு கிடைப்பதை விட மணல் கொள்ளையருக்கு அதிக வருவாய் கிடைப்பதை கருப்பு பண வழக்கில் கைதாகியுள்ள சேகர் ரெட்டியே ஒப்புக்கொண்டிருக்கிறார்.

தவறான வழிகளில் சேர்த்த கருப்பு பணத்தை வெளுத்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட சேகர் ரெட்டி, தம்மை பிணையில் விடுவிக்கக் கோரி சென்னை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் சில உண்மைகளை வெளியிட்டிருக்கிறார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்