News
Loading...

ஸ்மார்ட் கார்டு திட்டத்துக்கு ஒதுக்கிய ரூ.318 கோடி என்ன ஆனது..?! - ஸ்டாலின் கேள்வி

ஸ்மார்ட் கார்டு திட்டத்துக்கு ஒதுக்கிய ரூ.318 கோடி என்ன ஆனது..?! - ஸ்டாலின் கேள்வி

குடும்ப அட்டைகளில் இன்று முதல் உள்தாள் ஓட்டும் பணி தொடங்கி உள்ளதை சுட்டிக்கட்டியுள்ள ஸ்டாலின், ஏழை எளிய மக்களிளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும், முக்கிய முகவரி அடையாளமாக இருக்கும் ரேசன் கார்டுகளை வழங்குவதில் அதிமுக அரசு மெத்தனம் காட்டுவதாக சாடியுள்ளார். 

ஸ்மார்ட் கார்டு திட்டத்துக்கு 318 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டும், சென்னை, திருச்சி மாவட்டங்களில் முதல்கட்டமாக செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பும் இன்னும் அமலுக்கு வரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். ஸ்மார்ட் கார்டு திட்டத்தை செயல்படுத்தாமல் மீண்டும் உள்தாள் ஒட்டும் பணி துவக்கம் என்ற அறிவிப்பு, ஸ்மார்ட் கார்டு திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டதோ என்ற சந்தேகத்தை எழுப்புவதாகவும், அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி என்ன ஆனது என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ரேசன் கார்டுகளில் உள்தாள் ஒட்டும் பணில் மட்டுமே கவனம் செலுத்தாமல், பொதுமக்களுக்கான அரசின் அங்கீகரிக்கப்பட்ட அடையாளமாக இருக்கும் ரேசன் கார்டு விநியோகத்தில் கடந் 6 ஆண்டுகளாக நீடிக்கும் குழப்பத்தை நீக்கி ஸ்மார்ட் கார்ட்டு திட்டத்தில் கவனம் செலுத்தி விரைந்து செயல்படுத்த வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்