News
Loading...

சசி பாரதம் தொடக்கம்!

சசி பாரதம் தொடக்கம்!

 ‘மக்களால் நான்... மக்களுக்காக நான்’ எனச் சொன்ன ஜெயலலிதா, பொதுமக்களை கார்டனில் சந்தித்தது அபூர்வம்தான். எம்.ஜி.ஆரின் அரவணைப்பு, ஜெயலலிதாவின் பரிவு என நவரசங்களையும் 
தொட்டார் சசிகலா. கொஞ்சம் கொஞ்சமாக சசிகலா பெரியம்மாவாக மாறிக்கொண்டிருக்கிறார்.

சசி பாரதம் தொடக்கம்!

பொதுக்குழு நடந்த ஏரியாவில் ஜெயலலிதாவின் பிரமாண்டமான பேனர் இருந்தது. ‘சசிகலா பொதுச்செயலாளர்’ என்றதும் ஜெயலலிதாவை மறைத்துவிட்டு (!) சசிகலாவின் பேனர் உதயமானது. சட்டப்படிதான் நடக்குறாங்களாம்.

சசி பாரதம் தொடக்கம்!

ராமரின் பாதுகையை சிம்மாசனத்தில் வைத்து ஆட்சி நடத்திய பரதன் காட்சி ரிப்பீட் ஆனது. ஜெ. இல்லாத பொதுக்குழுவுக்கு ஜெயலலிதா பயன்படுத்திய குஷன் நாற்காலியையும் 
டீப்பாயையும் காரில் பத்திரமாகக் கொண்டு வந்தார்கள். அதை மேடையில் நடுநாயகமாக வைத்து ஜெயலலிதா படத்தை வைத்திருந்தார்கள்.

ராமர் பாதம் பட்டதால் அகலிகை விமோசனம் அடைந்தது போல கட்சிக்காரர்களுக்கு ஆனந்தம். ‘நிரந்த பொதுச் செயலாளர்’ என நேற்று வரை சொல்லிக்கொண்டிருந்தவர்கள் ‘சின்னம்மாதான் பொதுச் செயலாளர்’ என ஸ்ருதி மாறினார்கள். பொதுச் செயலாளர் பதவியை ஏற்கச் சொல்லி போடப்பட்ட தீர்மானத்தை சசிகலாவிடம் தருகிறார் ஓ.பன்னீர்செல்வம்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...