News
Loading...

தமிழகம் முழுவதும் நாளை ஜல்லிக்கட்டு: அலங்காநல்லூரில் OPS தொடங்கி வைக்கிறார்

தமிழகம் முழுவதும் நாளை ஜல்லிக்கட்டு: அலங்காநல்லூரில் OPS தொடங்கி வைக்கிறார்

ச்ச நீதிமன்ற தடை காரணமாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முடியாததால் கொதித்தெழுந்த இளைஞர்களும் மாணவர்களும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக மாணவர்களின் ஒருங்கிணைந்த போராட்டம் நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தது. இவர்களின் போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர். போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த தமிழக அரசு, உடனடியாக ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க வகை செய்யும் அவசர சட்டத்தை பிறப்பிக்கும் நடவடிக்கையில் இறங்கியது.

தமிழக அரசின் ஜல்லிக்கட்டு அவசரச் சட்டத்துக்கு மத்திய உள்துறையிடம் முறைப்படி ஒப்புதல் பெறப்பட்டதையடுத்து அதற்கான கோப்பு தமிழ்நாட்டுக்கு வந்து சேர்ந்தது. அந்த கோப்பில் கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று மாலையில் கையொப்பமிட்டு முறைப்படி அவசர சட்டத்தை பிறப்பித்தார். இதன்மூலம் ஜல்லிக்கட்டுக்கு இருந்த தடை நீங்கியுள்ளது. 

இதனையடுத்து நாளை தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜல்லிக்கட்டு களத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் உற்சாகம் அடைந்தனர். வாடிவாசல்களை தயார்படுத்தும் பணி மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகிறது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வாடிவாசல் விழாக்கோலம் பூண்டுள்ளது. 

தமிழக அரசு உத்தரவிட்டதும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த ஏதுவாக மதுரை மாவட்டத்தில் முன்கூட்டியே எல்லா ஏற்பாடுகளையும் கலெக்டர் வீரராகவ ராவ் தயார் நிலையில் செய்துள்ளார்.

ஜல்லிக்கட்டு நடப்பது உறுதியானதையடுத்து அனைத்து பகுதிகளிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அலங்காநல்லூரில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நாளை காலையில் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மற்ற பகுதிகளில் அமைச்சர்கள் தொடங்கி வைக்க உள்ளனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...