News
Loading...

வெளிச்சம் பாயாத நடிகர் சங்கப் போராட்டம்! - பின்னணியில் கமல்

வெளிச்சம் பாயாத நடிகர் சங்கப் போராட்டம்! - பின்னணியில் கமல்

ண்ணாவிரதம் இருப்பதற்குத் திட்டமிட்ட நடிகர் சங்க அமைப்பினர், பின்னர் அதை ‘மெளன அறவழி அமர்வு’ நிகழ்வாக நடிகர் சங்க மைதானத்தில் நடத்தினர். நடிகர்களின் போராட்டம் ஜல்லிக்கட்டுக்கான இளைஞர்களின் போராட்டத்தின் மீதான கவனத்தைத் திசைத்திருப்பிவிடக் கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தார் நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர். ‘இங்கே செல்போனில் படம் எடுப்பவர்கள், அதை இப்போதே வாட்ஸ் அப், ட்விட்டர், ஃபேஸ்புக்கில் பதிவுசெய்து தயவுசெய்து மாணவர்களின் போராட்டத்தைத் திசைதிருப்பி விடாதீர்கள்’ எனக் கேட்டுக்கொண்டார்.

‘இளைஞர்களின் போராட்ட வெளிச்சத்தை நடிகர்கள் வாங்கிக்கொள்ள வேண்டாம்’ என கமல் வேண்டுகோள் விடுத்திருந்ததைத் தொடர்ந்து, மீடியாக்களை அரங்கத்துக்குள் தவிர்த்தனர். நடிகர்களின் அமர்வை தொலைக்காட்சிகள் நேரலையாக ஒளிபரப்பினால் அது இளைஞர்களின் உணர்ச்சிபூர்வமான போராட்டத்துக்கு இடையூறு விளைவிக்கும் என்ற அக்கறையோடு மீடியாவை அனுமதிக்கவில்லை.

காலை 8 மணிக்கு ஆரம்பித்த நிகழ்ச்சி மாலை 5 மணிக்கு முடிந்தது. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் சர்ச்சைக்கு உள்ளான த்ரிஷா, காலை 8.50 மணிக்கு கருப்பு உடையில் ஆஜரானார். த்ரிஷா வெளியில் வரும்போது தங்கள் எதிர்ப்புகளைக் காட்டுவதற்கு நடிகர் சங்க வளாகத்துக்கு வெளியே இளைஞர்கள் குழு குழுமியிருந்தது தனிக்கதை.

சினிமா விழாக்களில் தலையையே காட்டாத ‘தல’ அஜித், கருப்பு பேன்ட் ஷர்ட்டில் மனைவி ஷாலினியுடன் கலந்துகொண்டார். காலை 9-15 மணிக்கு அரங்கத்துக்கு வந்த அஜித், மாலை 5 மணிவரை இருந்தார்.

மெளன அமர்வு நிகழ்வு முடிவடைந்ததும் மைக்கைப் பிடித்த பொன்வண்ணன், “நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் நடிக, நடிகைகள் யாரும் பீட்டா அமைப்பில் இருப்பதாக எனக்குத் தெரிந்தவரை இல்லை. அப்படி எனக்கு தெரியாமல் யாராவது பீட்டாவில் உறுப்பினராக இருந்தால் அவர்கள் உடனடியாக அந்த அமைப்பில் இருந்து விலக வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

வெளிச்சம் பாயாத நடிகர் சங்கப் போராட்டம்! - பின்னணியில் கமல்

ரஜினி காலை 11.15 மணிக்கு அரங்கத்துக்குள் நுழைந்தார். அவர் இரண்டு மணிநேரம் போராட்ட நிகழ்வில் இருந்தார்.

மதியம் 2 மணிக்கு கமல் வந்தார். அவருக்கு மருத்துவ சிகிச்சைக்காக டாக்டரின் அப்பாயின்ட்மென்ட் இருந்ததால் அரைமணி நேரம் மட்டுமே இருந்தார். 

நடிகர் ராஜேஷ் வைத்திருந்த ‘மண் எங்கள் தாய், பீட்டா எங்கள் பேய்’ என்கிற பேனரை பலரும் பாராட்டினர்.

நடிகர்களில் சூர்யா, கார்த்தி, விஷால், சத்யராஜ், வடிவேலு, பார்த்திபன், பாக்யராஜ், தனுஷ், சந்தானம், ‘ஜெயம்’ ரவி, சிவகார்த்திகேயன், எஸ்.ஜெ.சூர்யா, விக்ரம் பிரபு, ஜீவா, விக்ரம், உதயா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் கருணாஸ், விஷால் அணி வெற்றிபெற உழைத்த ஜே.கே.ரித்தீஷ் ஆகியோர் ஏனோ மிஸ்ஸிங். ‘செம்மீன்’ ஷீலா, சிம்ரன், சுகன்யா, வடிவுக்கரசி, கோவை சரளா ஆகியோர் வந்திருந்தனர். முன்னணி நடிகைகளான தமன்னா, அனுஷ்கா, காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ், ஆகியோர் ஏனோ வரவில்லை.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...