News
Loading...

ஏ.டி.எம்.களில் இன்று முதல் 4,500 ரூபாய் எடுத்துக் கொள்ள முடியும்

ஏ.டி.எம்.களில் இன்று முதல் 4,500 ரூபாய் எடுத்துக் கொள்ள முடியும்

.டி.எம்.களில் இன்று முதல் 4,500 ரூபாய் எடுத்துக் கொள்ள முடியும் என்ற அறிவிப்பு நடைமுறைக்கு வந்துள்ளது. உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் தடை குறித்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஏ.டி.எம்.களில் 2500 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்ற நிலை இருந்தது. இந்த வரம்பு புத்தாண்டு முதல் 4,500 ரூபாயாக உயர்த்தப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. அதன்படி, நள்ளிரவு 12 மணி முதல் ஏ.டி.எம். மையங்களில் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் இரண்டு கிடைத்தன. சில்லறை தட்டுப்பாடு காரணமாக, புதிய 500 ரூபாய் கடைக்கவில்லை. இந்தத் தட்டுப்பாடு நீங்கும்போது, 4,500 ரூபாய் முழுமையாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...