News
Loading...

பேஸ்புக்கில் மன்னிப்புக் கோரிய ‘தங்கல்’ திரைப்பட நடிகை

பேஸ்புக்கில் மன்னிப்புக் கோரிய ‘தங்கல்’ திரைப்பட நடிகை

காஷ்மீர் முதலமைச்சரை சந்தித்ததற்காக எதிர்ப்பு வலுத்ததை அடுத்து தங்கல் திரைப்படத்தில் நடித்த சிறுமி ஸைரா வசிம், பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். 

அமீர்கான் நடித்த தங்கல் திரைப்படத்தில், நடித்த காஷ்மீரி நடிகை ஸைரா வசிம், சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் மெஹ்பூபா முப்தியை சந்தித்தார். இதற்கு பிரிவினைவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சமூகவலைத்தளங்கள் மூலமாக ஸைராவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, மிரட்டல்களும் விடுக்கப்பட்டன. 

இந்நிலையில், மெகபூபா முப்தி உடனான சந்திப்பால் யார் மனமாவது புண்பட்டிருந்தால் மன்னிப்பு கோருவதால சைரா, தமது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் 16 வயதான சிறுமி என்ற கோணத்தில் தமது நடவடிக்கைகளை பார்க்குமாறும் அவர் எதிர்ப்பாளர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்